சென்னை: வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக வலுப்பெற்று மீண்டும் பலவீனமடைந்து கடலுக்குள்ளேயே சென்று விடுமாம். இதற்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருக்கலாமே என தமிழ்நாடு வெதர்மேன் கிண்டலாக மழை நிலவரம் குறித்து பதிவிட்டுள்ளார்.
தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் தற்போது விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருகிறது. மார்கழி மாதம் என்றால் குளிர் வாட்டி எடுக்கும் என்பது நியதி. ஆனால் தற்போது கடலோரப் பகுதிகளை தவிர்த்து பெரும்பாலான பகுதிகளில் வெப்ப சலனம் நிலவி வருகிறது.
இதற்கிடையே தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தமிழ்நாடு மழை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று சென்னை உள்ளிட்ட இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. வடகிழக்கு பருவமழை டிசம்பர் 23 முதல் மீண்டும் தீவிரமடைகிறது. டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கிறிஸ்துமஸுக்குப் பிறகு வரும் டிசம்பர் 26 மற்றும் 27 தேதிகளில் தமிழ்நாடு கடற்கரை பகுதிகளில் மீண்டும் நல்ல மழை பெய்யும்.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அங்குமிங்கும் சில நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கும். பின்னர் மீண்டும் பலவீனமடைந்து கடலுக்குள்ளே சென்றுவிடும். மேற்கிலிருந்து வரும் காற்றும் இதை கடலுக்குள் தள்ளி விடும்.
இதையெல்லாம் பார்க்கும்போது இதுக்கு பருத்தி மூட்டை பேசாம குடவுன்லேயே இருந்துருக்காலாமே என்று நீங்கள் நினைக்கலாம் என தமிழ்நாடு வெதர்மேன் ஜாலியாக பதிவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!
சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!
தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!
அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!
ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும். சட்டசபையில் அறிவிப்பு!
வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்
வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!
{{comments.comment}}