சென்னை: வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னைக்கு இன்று பிற்பகலில் இருந்து மழை தொடங்கும். பின்னர் மாலை இரவு நேரங்களில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்திருந்த நிலையில் காலையிலேய நகர் முழுவதும் பலத்த மழையைச் சந்தித்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் பரவலாக கன முதல் மிக கனமழை வரை கொட்டி தீர்த்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். அதேபோல் சென்னையை ஒட்டிய கடற்கரை பகுதிகளிலும் கடல் அலைகள் பெரும் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால் மீனவர்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களாக மழை குறைந்து மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி வெயில் அடித்து வந்தது. ஆனால் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதிலிருந்து தமிழ்நாடு முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மீண்டும் மழை பெய்யும் அறிகுறி தென்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தமிழ்நாடு மழை குறித்த அறிவிப்பை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில், வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்ந்து வருவதால் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்கள் பரவலாக மழை பெய்யும். நன்கு அமைந்த இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் டெல்டா மாவட்டங்களான நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர்,திருச்சி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யும்.
குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, உள்ளிட்ட பகுதிகளில் இன்று பிற்பகலில் இருந்து மழை தொடங்கும். தொடர்ந்து மாலை அல்லது இரவு நேரங்களில் மழையின் தீவிரம் அதிகரிக்க கூடும். இந்த ஆழ்ந்த காற்றழுத்த பகுதி சென்னைக்கு தொலைவில் இருந்தாலும் வடக்கு திசையில் நகர்ந்து வருவதால் சென்னைக்கும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
அதேபோல் விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ஆகிய மாவட்டங்களிலும் கனமழையை எதிர்பார்க்கலாம். குன்னூர் கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தால் மூன்று நாட்கள் அதனை ஒத்தி வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இந்த நிலையி் காலையிலேயே சென்னையின் பல பகுதிகளிலும், புறநகர்கள் பலவற்றிலும் கூட பலத்த மழை கொட்டித் தீர்த்தது. விட்டு விட்டு மழை பெய்து வருவதால் சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஜில் ஜில் சென்னையாக மாறியிருக்கிறது தலைநகர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!
சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!
தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!
அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!
ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும். சட்டசபையில் அறிவிப்பு!
வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்
வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!
{{comments.comment}}