மக்களே கவனம்.. சென்னையில் நாளை மழை அளவு அதிகரிக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

Oct 15, 2024,02:53 PM IST

சென்னை: சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் தற்போது வரை சில இடங்களில் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்துள்ளது. நாளை காலை தற்போதைய அளவை விட மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை தொடரும் எனவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தது தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. நாளை சென்னைக்கு அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதன்படி, சென்னையில் நேற்று நள்ளிரவு தொடங்கி தற்போது வரை சில இடங்களில் 20 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. 13 மணி நேரத்தில் 20 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. சென்னையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழை தொடரும். இடைவிடாமல் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த மழை உடனே நிற்பதற்கான வாய்ப்பு இல்லை. நாளை மேலும் அதிகரிக்கும்.




வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டை இன்னும் நெருங்கவில்லை. ஆனால் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் தீவிரமடையும். அதாவது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற அதிக வாய்ப்பு இல்லை. சென்னைக்கு அருகே மேகத்திரள்கள் மிக மெதுவாக நகர்ந்து வருவதால் அதி கனமழை பெய்து வருகிறது. 


அதிக மேகக்திரள்கள்  வந்தால் குறுகிய நேரத்திலேயே அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த அதி கன மழைக்கு இன்றே வாய்ப்பு இருப்பது போல் தெரிகிறது. தற்போது வட சென்னை பகுதிகளில் அதிக கன மழை பெய்து வருகிறது. தென் சென்னை பகுதிகளில் தற்போது மழை விட்டிருந்தாலும் மீண்டும் கன மழை தொடரும்.


இன்று காலை முதல் தற்போது வரை சென்னை முழுவதும் மழை விட்டு விட்டு  பெய்து வருகிறது. மாலை இரவு நேரங்களில் மழை தொடரும். கடந்த இரண்டு மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்று  20 சென்டிமீட்டருக்கும் அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்றை விட நாளை காலை மழை பொழிவு அதிகரிக்கும். நாளை காலையிலேயே 20 சென்டிமீட்டர் மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.


அண்ணா நகர் போன்ற பகுதிகளில் இன்று காலை 8:30 மணி வரை 9 சென்டிமீட்டர் மழை பெய்தது. அதன் பிறகும் 9 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் 4 மணி நேரத்தில் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இன்றும் வட உள் மாவட்டங்களில்  மழை பெய்ய வாய்ப்புள்ளது.  மேலும் மேற்கு நோக்கி காற்றின் திசை நகர்ந்துவிட்டால் வட உள் மாவட்டங்களான வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், தர்மபுரி, ஆகிய மாவட்டங்களில் நாளை மழை கொஞ்சம் அதிகரிக்கும். தென் உள் மாவட்டங்களில் படிப்படியாக மழையின் அளவு குறையும் என தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

அமரன் படத்தினால் மனஉளைச்சல் அடைந்த மாணவன்.. ரூ. 1.1 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ்!

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

கொங்கு நாட்டு நெல்லி, தக்காளி சட்னி + multigrains ஆட்டா அடை.. செம காம்போ மக்களே.. சாப்ட்டு பாருங்க

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்