சென்னை: காரைக்கால், நாகை, வேதாரண்யம், ராமேஸ்வரம் பகுதிகளில் பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தென் கிழக்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இரவு விட்டு விட்டு மழை பெய்து வந்தது. அதனை தொடர்ந்து இன்று அதிகாலை 6 மணிக்கு தொடங்கிய மழை காலை 10 மணி வரை மிதமான மழையாகவே பெய்து வந்தது.
இதற்கிடையே தமிழ்நாட்டில் இன்று சென்னை உட்பட 11 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று எந்த எந்த மாவட்டங்களில் மிக கனமழை முதல் மிதமான மழை வரை பெய்ய கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி காரைக்கால், நாகை, வேதாரண்யம், ராமேஸ்வரம் பெல்ட்கள் போன்ற பகுதிகளில் இன்று அதிகமான மழையை எதிர்பார்க்கலாம். வேதாரண்யம் முதல் ராமேஸ்வரம் வரை பலத்த மழை பெய்யும்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று நல்ல மழை பதிவாகி உள்ளது. மற்றபடி மழை விட்டு விட்டு தொடரும். வழக்கமான பருவ மழையாகவே இது இருக்கும். எனவே இதனை ஜாலியாக என்ஜாய் பண்ணுங்க என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார் .
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
திமுகவின் தொடர் வெற்றி.. எதிரணியினருக்கு எரிச்சலா இருக்கு.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
ஷாருக்கானுக்கு சட்டிஸ்கரிலிருந்து வந்த கொலை மிரட்டல்.. ஒய் பிளஸ் பாதுகாப்புக்கு உத்தரவு!
Lunch Box Recipe: மழைக்கு இதமான.. சூப்பரான கொள்ளு ரசம்.. வச்சு சாப்ட்டு பாருங்க.. செமையா இருக்கும்!
கமல் ஹாசனின் பணிகள் மென்மேலும் சிறக்கட்டும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
இன்று சூரசம்ஹாரம் 2024 .. அப்பன் முருகனின் அருள் கிடைக்க இதை செய்ய மறக்காதீங்க!
தாமரை.. வீடு வீடாக மலரத்தான் போகிறது.. அலறத்தான் போகிறீர்கள்.. டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்
காரைக்கால், நாகை, வேதாரண்யம், ராமேஸ்வரம்.. சூப்பரா மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன்
நீங்களால் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தை.. லவ் யூ சோ மச் அப்பா.. ஸ்ருதி ஹாசன் நெகிழ்ச்சி
Gold Rate.. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1320 குறைந்த தங்கம்.. நம்ப முடியலைல்ல.. டிரம்ப்தான் காரணமாம்!
{{comments.comment}}