சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 10 நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என நேற்று அறிவித்திருந்த நிலையில், இன்றும் மாநிலம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை சதத்தை தாண்டும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி விட்டது. இதனால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதே போலத்தான் இன்னும் பத்து நாளைக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் ஏற்கனவே தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி நேற்று மட்டும் சென்னை, வேலூர், சேலம், கரூர், ஈரோடு, திருப்பத்தூர், திருத்தணி, மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் வெயில் சதம் அடித்தது. குறிப்பாக வேலூரில் அதிகமட்சமாக 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை மற்றும் சென்னை மீனம்பாக்கத்தில் 101.6 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்றும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவித்துள்ளார். அதன்படி
தமிழ்நாட்டிற்கு இன்னொரு மோசமான நாள் இன்று.வேலூரில் நேற்று 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்த நிலையில் ,மீண்டும் இன்றும் 104 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மீனம்பாக்கத்திலும் அதிகபட்சமாக 101.6 டிகிரி பதிவாகும்.
அதே நேரத்தில் சென்னை புறநகர்ப் பகுதிகளில் 102.2 டிகிரி ஃபாரிஹீட்டை ஐ நெருங்கலாம்.
மதுரையில் சுமார் 102.2°பாரன்ஹீட்டும், சேலத்தில் 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் அல்லது 102.2 டிகிரி ஃபாரன்ஹீட்டை எட்டும். கரூர் மற்றும் ஈரோட்டில் 102.2° பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை சதத்தை தாண்டி இருக்கும் என தெரிவித்துள்ளார்.
வக்பு வாரிய சட்ட மசோதா நாளை தாக்கல்.. எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி எம்.பிக்கள் முடிவு
தமிழ்நாட்டில் வெப்பநிலை படிப்படியாக ..2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்..!
வழக்கத்தைவிட.. ஏப்ரல், ஜூனில் வெப்பம் அதிகரிக்கும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!
Emburan Movie: பெரியாறு அணை குறித்து அவதூறு கருத்துகளை நீக்குக.. பண்ருட்டி வேல்முருகன்..!
Madurai Chithirai Thiruvizha 2025: மீனாட்சி அம்மன் கோவிலில்..ஏப்ரல் 29ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்..
அருவறுப்பான ஆண்களே அழிஞ்சு நாசமா போங்க.. பாடகி சின்மயி ஆவேசம்!
கும்பகோணம் வெற்றிலைக்கும் தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு!
டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு.. ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்.. வெளியானது அரசு உத்தரவு..!
தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்.. அமித்ஷா கூறியது நகைச்சுவை:விசிக தலைவர் திருமாவளவன்!
{{comments.comment}}