கொடைக்கானல் செம கூல்.. வேலூரும் குளுருது.. தமிழ்நாடு முழுவதும் ஒரே ஜில் ஜில் கிளைமேட்தான்!

Jan 22, 2025,02:38 PM IST

சென்னை: தமிழ்நாட்டின் மலை வாசஸ்தலமான, மலைகளின் இளவரசி கொடைக்கானலில் குறைந்தபட்ச வெப்பநிலை  7.3 செல்சியஸ் பதிவாகி இருப்பதாகவும், நகரங்களில் குறைந்தபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 18.1 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருப்பதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


பண்டைய காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் தமிழ்நாட்டின் நிலவும் கால நிலையை பருவங்களாகப் பிரித்திருந்தனர்.அதாவது இந்த இந்த மாதத்தில் மழை பெய்யும், இந்த மாதத்தில் மழை பெய்யாது.. குளிர் இருக்கும், என்ற வழக்கில் நம் முன்னோர்கள் பயிரிடுதல், அறுவடை செய்தல், என உழவுத் தொழிலை சூழலைக்கு ஏற்றார் போல பக்குவப்படுத்தி செய்து வந்தனர். குறிப்பாக பருவ காலங்களை பருவ காலங்களாக மட்டும் பார்க்காமல் வாழ்வியலோடு தொடர்புடைய ஒன்றாகவும் செயல்படுத்தி வந்தனர். அதன் மூலம் நமக்கு இயற்கையான உணவுகளும் சுகாதாரமான வாழ்வியல் முறைகளும் நமக்கு கிடைத்தது.


தற்போது உள்ள பருவ மாற்றத்தால் மழைக்காலங்களில் அதிக வெப்பமும் வெயில் காலங்களில் மழையும் பெய்து வருகிறது. இதன் காரணமாக மக்களுக்கு பல்வேறு நோய்களும் தொற்றிக் கொள்கின்றன. அதேபோல் காலநிலை மாற்றத்தால் செயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள் மற்றும் தானியங்கள் நமக்கு கிடைக்கின்றன.அந்த வரிசையில் தற்போது தமிழ் மாதமான மார்கழி, தை முன்பனிக்காலம் எனவும், மாசி, பங்குனியை பின் பனிக் காலம் எனவும் பிரித்திருந்தனர்.


இந்தப் பருவத்தில் அதிக பனி நிலவுவதுடன் வெயில் அடித்தாலும், அதன் தாக்கமே இல்லாமல் சுகமாக இருக்கும். ஆனால் இன்றோ பனி காலத்தில் மழை பெய்து வருகிறது. அதே சமயத்தில் வெயிலின் தாக்கமும் அதிகமாகவும் இருந்து வருகிறது. அதாவது கடந்த வாரம் தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து தற்போது வானம் மேகமூட்டத்துடன் அவ்வப்போது வெயிலின் தாக்கமும் அதிகரித்தும் வருகிறது. 


இந்த நிலையில் நேற்று தமிழ்நாட்டில் எவ்வளவு குளிர் நிலவியது, என்ற அறிக்கையை தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:


மலைவாசஸ்தலங்களில் குறைந்தபட்ச வெப்ப நிலை


 


கொடைக்கானல்- 7.3

ஊட்டி  - 9.2

குன்னூர் - 9.8

ஏற்காடு  - 11.0

வால்பாறை - 13.5

ஏலகிரி- 14.8


தமிழ்நாட்டின் நகரங்களில்  குறைந்தபட்ச வெப்பநிலை


வேலூர் - 18.1

திருப்பத்தூர் - 18.2

சேலம் - 18.4

கோவில்பட்டி -  18.6

திருத்தணி - 18.8

பெரம்பலூர் - 18.9

மதுரை - 19.4

கோவை - 19.4

தருமபுரி - 19.5

திருவண்ணாமலை -19.6

திருப்பூர் - 19.9

திருச்சி - 20.4

கடலூர் - 20.4

ஈரோடு - 21

பாண்டி - 21

சென்னை AP - 21.5

காரைக்கால் - 21.8

சென்னை - 22.0

பாளையங்கோட்டை - 23.4

நாகப்பட்டனம் - 24.8

கன்னியாகுமரி - 24


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திமுக அரசு அமல்படுத்தும் திட்டங்களை ..எடப்பாடி பழனிச்சாமியால் தாங்கிக்க முடியலை.. முதல்வர் ஸ்டாலின்

news

Jokes: எப்படா குளிக்க போறோம்னு நெனச்சா அது வெயில் காலம்... ஏன்டா குளிக்கணும்னு நெனச்சா பனி காலம்!

news

திருவள்ளுவரையும், வள்ளலாரையும் களவாட முயற்சிப்பதே திமுகதான்.. வானதி சீனிவாசன் தாக்கு!

news

பரந்தூருக்கு பதிலாக திருப்போரூரில் விமான நிலையம் அமைக்கலாமே.. டாக்டர் அன்புமணி யோசனை

news

செல்வப் பெருந்தகை அவர்களே.. இதுதான் காங்கிரஸின் ராஜ தந்திரமா.. கேள்விகளை அடுக்கிய அண்ணாமலை!

news

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. Accused ஞானசேகரனுக்கு திடீர் வலிப்பு!

news

Senthil Balaji Vs Edappadi Palanisamy.. வார்த்தைப் போரில் குதித்த செந்தில் பாலாஜி, அதிமுக!

news

சீமான் கருத்துக்களை கருத்துக்களால்தான் எதிர்கொள்ள வேண்டும்.. அச்சுறுத்தக் கூடாது.. இயக்குநர் கெளதமன்

news

கொடைக்கானல் செம கூல்.. வேலூரும் குளுருது.. தமிழ்நாடு முழுவதும் ஒரே ஜில் ஜில் கிளைமேட்தான்!

அதிகம் பார்க்கும் செய்திகள்