வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு.. ஒரு வாரத்திற்கு மிதமான மழைக்கே வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்!

Dec 26, 2024,07:22 PM IST

சென்னை: வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்ததாக  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த சில நாட்களுக்கு பரவலாக மிதமான மழையை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்க கடல் பகுதிகளில் கடந்த 16ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மீண்டும் திரும்பி தெற்கு தென்மேற்கு திசையில் தமிழ்நாடு ஆந்திரா கரையோர பகுதிகளை ஒட்டி நகர்ந்து வந்தது. இதனால் தமிழகத்தில்  வடகிழக்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வங்கக்கடலில் நிலவி வரும்  ஆழ்ந்த காற்றழுத்த  தாழ்வு பகுதி காரணமாக தமிழக கடலோரப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்து வந்தது. மறுபுறம் அநேக இடங்களில் மழை இல்லாமல் வெயில் அதிகரித்து வந்தது.




இந்த நிலையில் தெற்கு ஆந்திரா மற்றும் வடக்கு தமிழக கடற்கரை பகுதிகளில் நேற்று நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 5:30 நிலவரப்படி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக  வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 


இதன் காரணமாக தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை எதுவும் இல்லை எனவும் தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் 7 நாட்கள் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. அதே வேளையில் ஆந்திராவில் இன்று ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்