ஆளுநர் உரைக்கு முன்பு தேசிய கீதம் பாடப்படவில்லை.. வெளிநடப்பு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்

Jan 06, 2025,05:08 PM IST

சென்னை: ஆளுநர் உரைக்கு முன்பு தேசிய கீதம் பாடப்படாமல் அது அவமதிக்கப்பட்டதால் ஆளுநர் கடும் வேதனையுடன் சட்டசபையிலிருந்து வெளியேறியதாக தமிழ்நாடு ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.


தமிழ்நாடு சட்டசபையில் இன்று ஆளுநர் உரையுடன் அவைக் கூட்டம் தொடங்குவதாக இருந்தது. ஆனால், ஆளுநர் உரையைப் படிக்காமலேயே ஆளுநர் ஆர். என். ரவி வெளியேறினார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் மாளிகை முதலில் ஒரு டிவீட் செய்திருந்தது. அதில், நாடாளுமன்றம், குடியரசுத் தலைவர் ஆகியோரை மேற்கோள் காட்டி ஒரு விளக்கம் இடம் பெற்றிருந்தது. பின்னர் அது நீக்கப்பட்டு, புதிதாக ஒரு விளக்கம் வெளியிடப்பட்டது. அதில்  ஆளுநர் மாளிகை கூறியுள்ளதாவது:




தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மீண்டும் பாரதத்தின் அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டன. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் வகுக்கப்பட்டுள்ள முதலாவது அடிப்படைக் கடமையாகும். அது அனைத்து சட்டப்பேரவைகளிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும்  பாடப்படுகிறது.  இன்று ஆளுநர் அவர்கள் பேரவைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. 


ஆளுநர் அவர்கள் பேரவையிடம் அதன் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவரான  மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடமும் மாண்புமிகு சட்டப்பேரவை சபாநாயகர் அவர்களிடமும்  உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். 


அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அப்பட்டமாக அவமதிக்கும் செயல்களுக்கு  உடந்தையாக இருந்து விடக்கூடாது என்பதால் ஆளுநர் அவர்கள் கடும் வேதனையுடன் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார் என்று அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Erode East.. ஈரோடு கிழக்கில் அதிமுக போட்டியா.. புறக்கணிப்பா.. ஜனவரி 11ல் முக்கிய முடிவு!

news

Erode East by election.. ஈவிகேஎஸ் இளங்கோவன் மகனுக்கு சீட் தரப்படுமா.. காங். நிலை என்ன?

news

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : விஜய் கட்சியின் நிலைப்பாடு என்ன.. போட்டியிடுமா? போட்டியிடாதா?

news

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு கடும் எதிர்ப்பு... மதுரை தமுக்கத்தில் ஆயிரக்கணக்கில் குவிந்த விவசாயிகள்!

news

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5ம் தேதி இடைத் தேர்தல்.. அறிவித்தது தேர்தல் ஆணையம்

news

விடை பெற்றார் ஜஸ்டின்.. அடுத்த பிரதமர் யார்.. கனடாவை அடுத்து ஆளப் போவது ஒரு தமிழ்ப் பெண்?

news

துணைவேந்தர் நியமனம்.. யுஜிசியின் புதிய விதிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவியைக் கண்டித்து.. திமுகவினர் ஆர்ப்பாட்டம்.. கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்பு!

news

நேபாளத்தை உலுக்கிய 7.1 ரிக்டர் பூகம்பம்.. பலர் பலி.. டெல்லியும் ஆடியதால் மக்கள் அதிர்ச்சி

அதிகம் பார்க்கும் செய்திகள்