தென் மாவட்டங்கள், டெல்டாவைப் புரட்டி எடுக்கும் கன மழை.. 25,26ம் தேதிகளில் மஞ்சள் எச்சரிக்கை!

Nov 20, 2024,10:24 AM IST

சென்னை:   வங்கக்கடலில் வரும் 23ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் தமிழ்நாட்டில் வரும் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது.


நடப்பு ஆண்டில் வங்கக்கடல் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மாறி மாறி காற்று சுழற்சிகள் ஏற்பட்டு மழை பெய்து வருகிறது. அதே சமயத்தில் இந்த சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பருவமடையும் தீவிரமடைந்து பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கன மழையால் தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள்  சாலையில் செல்ல கடும் சிரமம் ஏற்பட்டது. 




டெல்டா மாவட்டங்களில் செம மழை: 


நாகை, வேதாரண்யம், சிக்கல், முட்டம், கீழ்வேளூர், திருமருகல், போன்ற பகுதிகளில் விட்டு விட்டு பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அப்ப பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் அதிகமான வீடுகளுக்குள் தண்ணீர்  புகுந்தது. நாகை மாவட்டம் வேதாரணியத்தில் கடந்த இரண்டு நாட்களில் 29 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. 


தூத்துக்குடியில் கன மழை:


இது தவிர தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக கனமழை விட்டு விட்டு தற்போது வரை பெய்து வருகிறது. அதேபோல் தூத்துக்குடி சாலையில் உள்ள திருச்செந்தூர், சாத்தான்குளம், காயல்பட்டினம், உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் தாழ்வான இடங்கள் மற்றும் சாலைகளில் மழை நீர் செல்வதால் அப்பகுதிகளில் உள்ள உப்பளங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் மற்றும் திருச்செந்தூரில் தலா 45 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. குலசேகரபட்டினத்தில் 39 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக இன்றும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 


மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை: 




அதேபோல் விருதுநகர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களையும் முடிவு செய்து கொள்ளலாம் என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.இதனை அடுத்து நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, திருவாரூர், ஆகிய மாவட்ட ஆட்சியளர்களும் மழை விடுமுறை குறித்து அந்தந்த பள்ளி ஆசிரியர்களே முடிவு செய்யலாம் எனவும் அறிவித்துள்ளனர்.


அதன்படி கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர்,  திருவாரூர், ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது.


வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி:


இந்த நிலையில் தென் தமிழக மற்றும் குமரி கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நாளை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக உள்ளது. இதன் காரணமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 23ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரண்டு தினங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


தமிழ்நாட்டில் மிதமான மழை:


இதன் காரணமாக தமிழ்நாட்டில் வரும் 24ம் வரை தேதி ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. தொடர்ந்து 25ஆம் தேதி மற்றும் 26 ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால்  மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.


25 ஆம் தேதி கனமழை: 


கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ஆகிய ஏழு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

கள்ளக்குறிச்சியில்.. 60 பேரைக் காவு கொண்ட கள்ளச்சாராய வழக்கு.. சிபிஐ விசாரணைக்கு ஹைகோர்ட் உத்தரவு

news

3வது நாளாக கிடு கிடு என உயர்ந்து வரும் தங்கம்... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.400 உயர்வு

news

Fact Check: மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 62 ஆக உயர்த்தப்பட்டதாக வரும் தகவல் உண்மையா?

news

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பரவலாக கன மழை.. குற்றாலத்தில் வெள்ளம்.. குளிக்கத் தடை

news

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டசபைத் தேர்தல்.. இரு மாநிலங்களிலும்.. விறுவிறுப்பான வாக்குப் பதிவு!

news

தியேட்டர்களுக்குள் விமர்சனம்.. யூடியூபர்களை உள்ளேயே விடாதீர்கள்.. வெளியேற்றுங்கள்.. பாரதிராஜா ஆவேசம்

news

தென் மாவட்டங்கள், டெல்டாவைப் புரட்டி எடுக்கும் கன மழை.. 25,26ம் தேதிகளில் மஞ்சள் எச்சரிக்கை!

news

30வது திருமண நாளை பிரமாண்டமாக கொண்டாடக் காத்திருந்தோம்.. ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கம்

news

நவம்பர் 20 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

அதிகம் பார்க்கும் செய்திகள்