Red Alert: 3 மாவட்டங்களுக்கு நாளை, நாளை மறு நாள் 2.. ரெட் அலர்ட்.. மிக மிக கன மழை பெய்யும்!

Nov 25, 2024,02:37 PM IST

சென்னை: வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இன்று இரவு முதல் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால், நாளை 3 மாவட்டங்களுக்கும், நாளை மறு நாள் 2 மாவட்டங்களுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது.


வங்க கடலில் நிலைக் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் இன்று இரவு முதல் நாளை நாளை மறுநாள் மிக கனமழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது ரெட் அலர்ட் எச்சரிக்கையும் வந்து விட்டது.


தென்கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி மையம் கொண்டிருந்த நிலையில் மேற்கு வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புதுச்சேரிக்கு தென்கிழக்கே 980 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 1050 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. 


ரெட் அலர்ட்




இது அடுத்த இரண்டு நாட்களில் வடமேற்கு திசையில் தமிழ்நாடு இலங்கை கடலோரப் பகுதியை நோக்கி நகரக்கூடும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்ததால் தமிழ்நாட்டில் இன்று இரவு முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது. நாளை நாளை மறுநாள் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.


நாளை மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டனம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. நாளை மறு நாள், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்காலுக்கு ரெட் அலர்ட் தரப்பட்டுள்ளது.


இன்று இரவு முதல் டெல்டா மாவட்டங்களில் கன மழை

 

இன்று இரவு முதல் டெல்டா மாவட்டங்களில் படிப்படியாக மழை  தீவிரமடையும். குறிப்பாக நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், மற்றும் காரைக்காலில் இன்று இரவு முதல் கனமழை தொடங்கி, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும். அதே நேரத்தில் குறைந்த நேரத்திலேயே டெல்டா கடலோரப் பகுதிகளில் அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக வலுப்பெற்றதை தொடர்ந்து சென்னை எண்ணூர், நாகை, கடலூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய ஒன்பது துறைமுகங்களில் ஒன்றாம் 1ஆம் எண் புயல் கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ள தாகவும் தெரிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பிறந்த நாளின்போது.. பிளக்ஸ் பேனர்கள், பட்டாசுகளைத் தவிர்க்க வேண்டும்.. துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின்

news

Chennai temples: குழந்தை வரம் வேண்டுமா.. வேண்டுவதைத் தரும் சென்னை கர்ப்பரக்ஷாம்பிகை கோவில்!

news

Real life Story.. இரு மனம் கலந்தது... இருமுறை மணம் (திருமணம்).. கதையல்ல நிஜம்!

news

ராமதாஸ் குறித்த பேச்சுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்.. அன்புமணி ராமதாஸ்

news

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு வேற வேலை இல்லை.. முதல்வர் மு.க. ஸ்டாலின்

news

மகாராஷ்டிராவின் புதிய முதல்வர் யார்?.. தொடரும் குழப்பம்.. போட்டியில் முந்தும் பட்னாவிஸ்!

news

ஐந்து மாவட்டங்களில் இன்று கன மழை.. நாளை 8 மாவட்டங்களில் அதி கன மழை.. வானிலை மையம் தகவல்

news

தமிழ்நாடு சட்டசபை டிசம்பர் 9ம் தேதி கூடுகிறது.. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

news

Red Alert: 3 மாவட்டங்களுக்கு நாளை, நாளை மறு நாள் 2.. ரெட் அலர்ட்.. மிக மிக கன மழை பெய்யும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்