சென்னை: ஃபெங்கல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் அதிக கனமழையும், 11 மாவட்டங்களில் மிக கனமழையும், 4 மாவட்டங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறுகிறது. இந்த புயலுக்கு ஃபெங்கல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் அடுத்த இரண்டு தினங்களில் வடக்கு- வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழ்நாடு கடற்கரைப் பகுதியை நோக்கி நகரக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த புயல் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் நான்கு நாட்கள் ஒரு சில இடங்களில் மிக கனமழை முதல் அதிக கன மழை வரை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி
இன்று அதி கனமழை (ரெட் அலர்ட்):
திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது 21 சென்டிமீட்டருக்கும் அதிகமாக கன மழை பெய்யக்கூடும் என்பதால் மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
இன்று மிக கனமழை (ஆரஞ்சு):
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று கனமழை (எல்லோ அலர்ட்):
கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, தூத்துக்குடி, ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை அதிக கன மழை (ரெட் அலர்ட்):
கடலூர், மயிலாடுதுறை, ஆகிய இரண்டு மாவட்டங்களில் நாளை அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
நாளை மிக கனமழை (ஆரஞ்சு):
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர்,திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ஆகிய 10 மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை கனமழை (எல்லோ):
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், ஆகிய 7 மாவட்டங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 28ஆம் தேதி மிக கனமழை (ஆரஞ்சு):
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ஆகிய ஐந்து மாவட்டங்களில் நாளை மறுநாள் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 28ல் கன மழை (எல்லோ):
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், ஆகிய 4 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 29ல் கனமழை (எல்லோ):
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய ஐந்து மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நம்பர் 30ஆம் தேதி கன மழை (எல்லோ):
திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, ஆகிய மூன்று மாவட்டங்களில் நவம்பர் 30ம் தேதி கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
புயல் எங்கு எப்போது கரையைக் கடக்கும்.. IMD சென்னை தலைவர் பாலச்சந்திரன் சொல்வது என்ன?
Cyclone Fengal: தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் அதி கன மழைக்கு வாய்ப்பு.. நாளை 11 மாவட்டங்கள்!
கனமழை எதிரொலி.. கடலோர மாவட்ட ஆட்சியர்கள் தயார் நிலையில் இருக்கவும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
Heavy rain alert.. சென்னையில் 8 ஆவின் பாலகங்கள்.. 24 மணி நேரமும் செயல்படும் என அறிவிப்பு!
Healthy Soups.. ஜிலுஜிலு மழைக்கேற்ற.. சூப்பரான கமகம வெஜிட்டபிள் சூப்.. செமையா இருக்கும்!
Cyclone Fengal.. நாளை உருவாகிறது புயல்.. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும்
அதே இடம்.. அதே புயல்.. OMG.. 99 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மிரட்ட வரும் Depression!
Chennai Rains.. சென்னையில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
தமிழ்நாட்டை மெல்ல மெல்ல நெருங்கி வரும் காற்றழுத்தம்.. இன்றும் நாளையும் அதி கன மழைக்கு வாய்ப்பு!
{{comments.comment}}