சென்னை: தமிழ்நாட்டில் 26 மற்றும் 27ஆம் தேதி களில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும், 25ஆம் தேதி ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் ஏற்கனவே வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள் மற்றும் தென் மாவட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பால் 3 மணி நேரம் இடைவிடாத கனமழை கொட்டி தீர்த்தது. மூன்று மணி நேரத்தில் சுமார் 19 சென்டிமீட்டர் கன மழை வெளுத்து வாங்கி ராமநாதபுரம் மாவட்டத்தையே புரட்டி போட்டது. இதனால் சாலைகள், தாழ்வான இடங்களில், மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த மேகவெடிப்பு எதிரொலியால் ராமேஸ்வரம் பாம்பனிலும் பலத்த மழை பெய்தது. இது தவிர கன்னியாகுமரி, திருவாரூர், கடலூர், திருச்செந்தூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இது தவிர பெரும்பாலான பகுதிகளில் இதமான காற்றுடன் சாரல் மழையும் பெய்து வருகிறது.
கன்னியாகுமரிக்கு உதவி எண்கள் அறிவிப்பு
அதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அங்குள்ள அருவிகள் மற்றும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்களின் பாதுகாப்பு கருதி கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு குறித்து தொடர்பு கொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு காவல் கட்டுப்பாட்டு அறை 100 மற்றும் 7010363173 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். வெள்ள மீட்புப் பணிகளில் மக்களுக்கு 24 மணி நேரமும் போலீசார் உதவ தயார் நிலையில் உள்ளனர் என எஸ் பி சுந்தரவதனம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு மழை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். இதற்கிடையே தமிழ்நாட்டில் நவம்பர் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அப்போது 12 முதல் 20 சென்டிமீட்டர் மழை வரையில் மழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
25 ஆம் தேதி ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது ஏழு முதல் 11 சென்டிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என்பதால் 25ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு மஞ்சள் நிற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்று சுழற்சி:
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு வளிமண்டலம் மேலடுக்கு சுழற்சி உருவாகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
தொடர் உயர்வில் தங்கம்... சவரன் 57,000த்தை தாண்டியதால் மக்கள் அதிர்ச்சி.. இப்படியே போனால் எப்படி!
சீனாவுக்குப் போகும்.. தமிழர்களின் மனம் கவர்ந்த மகாராஜா.. விஜய் சேதுபதி ஹேப்பி அண்ணாச்சி!
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
Ramanathapuram Rains: ராமநாதபுரத்தை வச்சு செய்த மேக வெடிப்பு.. மழை தொடருமாம் மக்களே!
நவம்பர் 21 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
இன்று இந்த 4 ராசிக்காரர்கள் கவனமா இருக்கணும்
தஞ்சாவூர் ஆசிரியை ரமணி குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்.. பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை
{{comments.comment}}