More Rains on the way: நவ. 23ஆம் தேதி வங்கக்கடலில் உருவாகிறது.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!

Nov 19, 2024,01:20 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் வரும் 23ஆம் தேதி தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது  இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. 


தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பரவலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதே போல் குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதன் காரணமாகவும் தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்து வருகிறது.




இந்த நிலையில் வங்க கடலில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியில் உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 


அதன்படி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நவம்பர் 21ஆம் தேதி வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாக உள்ளது. நவம்பர் 23ஆம் தேதி தென் கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. தொடர்ந்து இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் இன்று தமிழ்நாட்டில் மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது .


சென்னை மழை: 


சென்னையில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.


மீன் பிடிக்க தடை: 


தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் நாகை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


நவம்பர் 25ஆம் தேதி: 


கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ஆகிய ஏழு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Short Film.. கடற்கரை .. வாழ்க்கையின் வலிகளை எளிமையாக சொல்லும் அழகான குறும்படம்!

news

Lunch box recipe : ரத்த சோகையை ஓட ஓட விரட்டும் சூப்பரான கோங்கூரா தொக்கு

news

இந்தி மயமான எல்ஐசி இணையதளம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

news

ஜாலி ஓ ஜிம்கானா.. இது சிரிப்பூட்டி மகிழ வைக்கும் கமர்ஷியல் என்டர்டெய்னர்.. மடோனா ஹேப்பி அண்ணாச்சி!

news

ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி.. சேலம் டிரெய்னருக்கு நேர்ந்த பரிதாபம்.. இளம் வயது மாரடைப்பு என்ன காரணம்?

news

More Rains on the way: நவ. 23ஆம் தேதி வங்கக்கடலில் உருவாகிறது.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!

news

ஹமாரா எல்ஐசி ஹே.. பூரா இந்தி ஹே.. முற்றிலும் இந்தி பேசும் தளமாக மாறிய எல்ஐசி!

news

கத்திக்குத்துக்குள்ளாகி குணமடைந்த .. கிண்டி மருத்துவமனை டாக்டர் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்!

news

நயன்தாராவை விடுங்க பாஸ்.. இட்லி கடை டீமுடன்.. பாங்காக் பறக்கப் போகும் தனுஷ்

அதிகம் பார்க்கும் செய்திகள்