சென்னை: வங்க கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வருவதால், இன்று தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் அதிக கன மழை பெய்யக்கூடும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்
வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழ்நாட்டில் நேற்று முதல் பல்வேறு பகுதிகளில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் காமராஜர் சாலை, ஜிஎஸ்டி சாலை, தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், தி.நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் தற்போது வரை கன மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் ஆறு போல் ஓடுகிறது.
சென்னையில் பகலிலேயே இருள் சூழ்ந்து இரவு போல் காட்சி அளிக்கிறது. இதனால் சாலையில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எறிய விட்டபடி செல்கின்றனர். அதேபோல் ராமேஸ்வரத்தில் பெய்து வரும் கன மழையால் கடல் அலைகள் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதனால் அக்னி தீர்த்த கடலில் மக்கள் ஆபத்தை உணராமல் தர்ப்பணம் செய்து வருகின்றனர்.
இது தவிர திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவாரூர், கடலூர், திருவண்ணாமலை, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தென்காசி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு மழை குறித்த அறிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவி வருகிறது. தொடர்ந்து இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென் தமிழ்நாட்டின் நோக்கி நகரக் கூடும். பின்னர் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக படிப்படியாக வலுவிழக்க கூடும்.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது 21 சென்டிமீட்டருக்கும் அதிகமாக மழை பெய்யக்கூடும் என்பதால் இன்று தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில்
குமரி கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள், தமிழக கடலோரப் பகுதிகளில் இன்றும் நாளையும் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் எனவும், இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்லக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை வடகிழக்கு பருவமழை இயல்பை விட கூடுதலாக 16 சதவீதம் மழை பெய்துள்ளது. குறிப்பாக சென்னையில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட கூடுதலாக 24 சதவிகிதம் செய்துள்ளது.
அதேபோல் கேரளாவிலும் இன்று ஒரு சில இடங்களில் அதிக கன மழை பெய்யக்கூடும் என்பதால் கேரளாவிற்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா, ஆந்திராவில் இன்று ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கீர்த்தி சுரேஷ் திருமண நிகழ்ச்சியில்.. தவெக தலைவர் விஜய்.. பட்டு வேட்டி சட்டையில் கலக்கலாக ஆஜர்!
திருவண்ணாமலை.. தீப மலையின் உச்சியை அடைந்தது தீபம் ஏற்றும் ராட்சத கொப்பரை!
20வது நெக்சஸ் பிசினஸ் இன்குபேட்டர் கூட்டமைப்பிற்கான ஆட்சேர்ப்பு தொடங்கியது.. அமெரிக்கத் தூதரகம்
3 மாவட்டங்களில் இன்று அதிகன மழைக்கான ரெட் அலர்ட்.. நாளை தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
Copyrights case... நடிகர் தனுஷ் நயன்தாரா மீது தொடர்ந்த வழக்கு.. ஜனவரி 8ல் இறுதி விசாரணை
IMD alert: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு.. அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழக்கும்.. அதி கன மழைக்கு வாய்ப்பு
2025ல் இயற்கை கோரத்தாண்டவமாடும்.. அரசியல் கலகங்கள் தலைதூக்கும்.. ஜோதிடர் சிவ.ச நடராஜ தேசிகர் கணிப்பு
Yearender 2024: அஜீத்தால் பிரபலமடைந்த அஜர்பைஜான்.. அதிகம் கூகுள் செய்யப்பட்ட நாடு இதுதான்!
Yearender 2024: நாக்கில் வச்சதும்.. நச்சுன்னு சுவைக்கும் மாங்காய் ஊறுகாய்க்கு.. தேடுதலில் 2வது இடம்!
{{comments.comment}}