வங்கக்கடல் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. அடுத்த 12 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுவடையும்!

Dec 20, 2024,10:20 AM IST

சென்னை: வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாகவே விட்டுவிட்டு கன முதல் மிதமான மழை வரை பெய்தது. நகரின் பல்வேறு பகுதிகளில் இந்த மழை தற்போதும் நீடித்து வருகிறது. 


கிண்டி, அடையாறு, பட்டினப்பாக்கம், மெரினா, மந்தவெளி, மயிலாப்பூர், வேளச்சேரி, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை காணப்பட்டது. அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் மிதமான மழை பெய்துள்ளது. 




வட கடலோர மாவட்ட பகுதிகளில் மழை பெய்து வருவதால் தென் மாவட்ட பகுதிகளில் பனி குறைந்தது மிதமான வெயிலுடன் வெக்கை நிலவி வருகிறது.


இதற்கிடையே தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் வட தமிழ்நாடு மற்றும் ஆந்திரா கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. 


அதன்படி தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு திசையில் நகர்ந்து மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவு வருகிறது.இது அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 


இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று முதல் 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் ஆந்திராவில் இன்று ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Proverbs: உணவுப் பழக்கங்களும் பழமொழி அர்த்தங்களும்.. ஆயிலை குறைத்து ஆயுளைப் பெருக்கு!

news

மார்கழி 6 - திருவெம்பாவை பாசுரம் 6 .. மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை!

news

மார்கழி 6 - ஆண்டாள் அருளிய திருப்பாவை.. பாடல் 6.. மாயனை மன்னு வட மதுரை மைந்தனை!

news

நெல்லை கோர்ட் வாசலில் வைத்துக் கொலை.. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

news

நெல்லையில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவு.. தமிழ்நாடு விரைகிறது கேரள அரசின் குழு

news

ஆங்கில புத்தாண்டு 2025 ராசிபலன் : தனுசு ராசிக்காரர்களே.. அவசரம் தவிர்த்தால் ஆனந்தம் அதிகரிக்கும்!

news

2025ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபையின்.. முதல் கூட்டத் தொடர்.. ஆளுநர் உரையுடன் ஜனவரி 6ல் நடைபெறும்!

news

திருநெல்வேலியில் பயங்கரம்.. கோர்ட் முன் இளைஞர் வெட்டிக்கொலை.. சில மணி நேரங்களில் பிடிபட்ட 7 பேர்!

news

Yearender 2024.. மிகச் சிறந்த வட கிழக்குப் பருவ மழை.. மொத்த தமிழ்நாட்டுக்கும் அள்ளித் தந்த வானம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்