வளிமண்டல சுழற்சி.. தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

Nov 19, 2024,10:08 AM IST

சென்னை: வளிமண்டல காற்று சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில்  ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. தற்போது  மாநிலம் முழுவதும்  வெயில் தலைகாட்டாமல் கருமேகங்கள் சூழ்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. இதனால் குளுகுளுவென்று சூழல் நிலவி வருகிறது குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்ட பகுதிகளில்  கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு காரைக்கால் மற்றும் தூத்துக்குடி,நாகை,  மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 




அதேபோல் தஞ்சை மாவட்டத்திலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னாடிமங்கலம், உள்ளிட்ட பகுதிகளில் நேற்று  தொடங்கிய மழை தற்போது வரை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான இடங்களில் உள்ள சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகள்  முழுவதையும் மழை நீர் ஆக்கிரமித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வெளியில் செல்ல முடியாத சூழ்நிலையும் நிலவி வருகிறது. 


இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகளில் மழை பெய்கிறதோ அந்தப் பகுதிகளின் மழை நிலவரம் அறிந்து அந்தப் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தலைமை ஆசிரியரே முடிவு எடுக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.


இதற்கிடையே குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் வரும் 24ம் தேதி வரை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இன்று கனமழை: 


மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


சென்னை மழை: 


சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஹமாரா எல்ஐசி ஹே.. பூரா இந்தி ஹே.. முற்றிலும் இந்தி பேசும் தளமாக மாறிய எல்ஐசி!

news

கத்திக்குத்துக்குள்ளாகி குணமடைந்த .. கிண்டி மருத்துவமனை டாக்டர் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்!

news

நயன்தாராவை விடுங்க பாஸ்.. இட்லி கடை டீமுடன்.. பாங்காக் பறக்கப் போகும் தனுஷ்

news

அதிரடியாக மீண்டும் உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்றைய விலை என்ன தெரியுமா?

news

திருச்செந்தூர் தெய்வானைக்கு திடீரென அவ்வளவு கோபம் வரக் காரணம்.. பாழாய்ப் போன அந்த செல்பிதான்!

news

வளிமண்டல சுழற்சி.. தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

news

நவம்பர் 19 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

கன்னி ராசிக்காரர்களே... வெற்றிகள் குவிய போகும் நேரம் இது

news

அதிமுகவுடன் தவெக கூட்டணி என்ற செய்தி பொய்யானது.. மக்கள் புறக்கணிப்பார்கள்.. புஸ்ஸி ஆனந்த்

அதிகம் பார்க்கும் செய்திகள்