Heavy Rain Alert: தமிழ்நாடு முழுவதும் பரவலாக கன மழை.. சென்னையில் விடிய விடிய கொட்டியது!

Dec 12, 2024,10:05 AM IST

சென்னை: வங்க கடலில்  நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி  அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டை நோக்கி வர இருப்பதால் இன்று தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில்  கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


20 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை




வங்கக்கடலில் ஏற்கனவே உருவான ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் தற்போது தான் குறைந்த நிலையில், நேற்று இரவு முதல் தற்போது வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், திருவாரூர், நாகை, விழுப்புரம், ராமநாதபுரம், மதுரை, உள்ளிட்ட  பல்வேறு பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக திருவாரூர் 20 மணி நேரமாக இடைவிடாத மழை கொட்டி தீர்த்தது. இதனால் சம்பா சாகுபடி விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர். ஏனெனில் ஏற்கனவே ஃபெஞ்சல் புயலால் மழை நீர் வயல்களில் தேங்கிய நிலையில் மீண்டும் மழை தொடர்வதால்  பயிர்கள் அழுகும் நிலை ஏற்படும் என விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.


இந்த தொடர் கன மழை காரணமாக இன்று சென்னை, ராமநாதபுரம், சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை,நாகை,தஞ்சை, விழுப்புரம், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவள்ளூர், கரூர், வேலூர், தூத்துக்குடி, திருப்பத்தூர், ஆகிய 20 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 


விடுமுறை மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ரத்து


அதேபோல் நெல்லை மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள மாவட்டங்களில் இன்று நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரத்து செய்யப்பட்ட தேர்வுகள்  நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். அதேபோல் திருவள்ளுவர் மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக இன்று நடைபெற இருந்த பல்கலை தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.


இந்த நிலையில் இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நீடித்துவரும் வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் தமிழக இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதனை ஒட்டிய புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் தரைக்காற்று சுமார் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீச கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 


23 மாவட்டங்களில் இன்று கன மழை வாய்ப்பு


இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, கோவை, உள்ளிட்ட 23 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளது.


அதேபோல் தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், ஆகிய மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

'இட்லி கடை' பிரியர்களே.. ஹேப்பி நியூஸ் .. அக்டோபர் 1ம் தேதி திரைக்கு வருகிறார் தனுஷ்!

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்