தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் அதி கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை!

Dec 02, 2024,05:43 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில்  அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும், நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். 


தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கியது. பின்னர் இந்த புயல் கடந்த சனிக்கிழமை புதுச்சேரி அருகே கரையை கடந்து வலுவிழந்து தற்போது நிலப்பரப்பின் வழியாக கர்நாடகத்தை நோக்கி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக நகர்ந்து கொண்டுள்ளது. 




இதன் எதிரொலியாக தற்போது திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வரலாறு காணாத கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் அணைகளும் ஆறுகளும் வேகமாக நிரம்பி அதிகப்படியான உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கி கடல் போல் காட்சியளிக்கின்றன. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். 


இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் மிக கனமழை முதல் அதி கன மழை வரை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 


இன்று அதி கனமழை(ரெட் அலர்ட்):


கோவை, நீலகிரி, ஆகிய மாவட்டங்களில் இன்று அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.


மிக கனமழை (எல்லோ அலர்ட்):


கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, கரூர், மதுரை, விருதுநகர், தென்காசி, ஆகிய 10 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான எல்லோ அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.


மாலை 4:00 மணிக்குள் கனமழைக்கு வாய்ப்பு: 


திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை,கடலூர், ஆகிய 7 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணிக்குள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 


நாளை மிக கனமழை (ஆரஞ்சு அலர்ட்):


ஈரோடு திருப்பூர் தேனி திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது 12 முதல் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என்பதால் நாளை 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.


நாளை கனமழை:


கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல்,கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை,திருச்சி, பெரம்பலூர், திருப்பத்தூர்,ஆகிய 15 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


கேரளா மழை:


அதேபோல் கேரளாவில் உள்ள கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு, கண்ணூர், காசர்கோடு, ஆகிய  ஐந்து மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.


டிசம்பர் 4, 5, 6,ஆகிய தேதிகளில் எந்த வானிலை அறிக்கையும் இல்லை எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

news

சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து.. கருப்பு பட்டை அணிந்து சட்டசபைக்கு வந்த.. எம்எல்ஏக்கள்..!

news

Today gold rate:புதிய உச்சத்தில் தங்கம் விலை... சவரனுக்கு எவ்வளவு உயர்வு தெரியுமா?

news

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில்..மக்களவையில் நிறைவேறியது.. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா

news

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக.. ஏப்ரல் 5ல் மின் நுகர்வோருக்கான.. சிறப்பு முகாம் ஏற்பாடு..!

news

மேகம் கருக்குது மழை வர பாக்குது.. தமிழ்நாட்டில் இன்று முதல் 5 வரை கனமழைக்கு வாய்ப்பு..!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 03, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்