சென்னை: தமிழகத்தில் வடகடலோர மாவட்டங்கள், கடலோர உள் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இயல்பை விட டிசம்பர் மாதத்தில் அதி கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். தென் மாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டலத்தில் இயல்பான மழையே பதிவாகும் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் ஃபெஞ்சல் புயல் எதிரொலியால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை கொட்டி தீர்த்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய நகரங்கள் மழை நீரில் தத்தளித்தன. இதனைத் தொடர்ந்து மழைநீர் மெல்ல மெல்ல வடிந்து இப்பொழுது வரை இயல்பு நிலைமை திரும்பி வருகிறது.
இந்த நிலையில் டிசம்பர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதி தீவிரமாக இருக்கும் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் ஒரு தகவலை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் டிசம்பர் மாதத்திற்கான மழை நிலவரம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது: டிசம்பர் மாதத்தில் தமிழகத்தில் இயல்பை விட மிக அதிக மழை பதிவாக கூடும்.
இயல்பிற்கு மிஞ்சிய (Large excess rains) மழை
வடகடலோரம் மற்றும் டெல்டா மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டிணம், திருவாரூர், காரைக்கால், தஞ்சாவூர் மாவட்டங்களில் இயல்பிற்கு மிக மிஞ்சிய மழை பதிவாக கூடும். 24 மணி நேரத்தில் அதித கனமழை வாய்ப்பும், குறுகிய கால பெருமழை வாய்ப்பும் தொடர்கிறது.
இயல்பிற்கு அதிக மழை (exces rain)
கடலோரத்தை ஒட்டிய உள் மாவட்டங்களான இராணிப்பேட்டை வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி மற்றும் கடலோர மாவட்டங்களான புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்களில் இயல்பிற்கு அதிக மழை வாய்ப்பு உள்ளது.
மேற்கு மாவட்டங்கள், கொங்கு மண்டலம் மற்றும் தென் மாவட்டங்களில் இயல்பான மழை பதிவாக கூடும். டிசம்பர் 10ம் தேதி முதல் 25ம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய கூடும்.
இதுவரை தமிழகம் மூன்று சுற்று மழையை பெற்றுள்ள நிலையில், டிசம்பர் மாதத்தில் அடுத்தடுத்து மேலும் மூன்று சுற்று வடகிழக்கு பருவமழை எதிர்ப்பார்க்கலாம்.
நான்காவது சுற்று பருவமழை டிசம்பர் 11ம் தேதி முதல் 16ம் தேதி வரை நீடிக்க கூடும். காற்றழுத்த தாழ்வு பகுதி/ தாழ்வு மண்டலம் உருவாகி நான்காவது சுற்று மழையை கொடுக்கும்.
டெல்டா & வடகடலோர மாவட்டங்களில் டிசம்பர் 11ம் தேதி இரவு முதல் 16ம் தேதிக்கு இடைப்பட்ட நாட்களில் பிரதானமாக மழை பெய்யக்கூடும். ஒட்டுமொத்த தமிழகமும் இந்த சுற்றில் மழை பெறும் என்பதும் குறிப்பிடதக்கது.
டிசம்பர் 20ம் தேதியை ஒட்டி தெற்கு வங்ககடலில் மீண்டும் புயல் சின்னம் உருவாகி தமிழக கடற்கரை நோக்கி நகரும், இதன் காரணமாக ஐந்தாம் சுற்று பருவமழை டிசம்பர் 18ம் தேதி முதல் 24ம் தேதி வரை எதிர்ப்பார்க்கலாம். ஒட்டுமொத்தமாக டிசம்பர் மாதத்தில் பருவமழை தீவிரமடைந்து மழையை கொடுக்கும் நிகழ்வுகள் உள்ளது.
தற்போது தமிழகத்தின் பெரும்பாலான நீர் நிலைகளில் நீர் நிரம்பும் தருணத்தில் இருப்பதாலும், மண்ணில் ஈரப்பதம் வெகுவாக அதிகரித்து இருப்பதாலும் வரக்கூடிய 4 வது, 5ம் சுற்றுகளில் கூடுதல் எச்சரிக்கை தேவை.
குறிப்பாக ஃபெஞ்சல் புயல் பாதித்த புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் கூடுதல் கவனமும், எச்சரிக்கையும் தேவை.
டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிர்கள் கதிர் பறிக்கும் சூழலில் இருப்பதால் இனி வரக்கூடிய நாட்களில் மிககனமழை, அதித கனமழை வேளாண்மையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
குறுகிய கால பெருமழை நிலச்சரிவு, பெருவெள்ளம் மற்றும் மக்களின் பொருளாதாரம் போன்றவற்றையும் பாதிப்படைய செய்யும் சூழல் நிலவுகிறது.
இப்பதிவு மக்களை அச்சப்படுத்த பதிவிடவில்லை,பருவமழையின் வரக்கூடிய சுற்றுகளில் மிகுந்த கவனம் தேவை என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே பகிரப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Gold rate.. தங்கமே தங்கம்.. இப்படி வித்தா எப்படிம்மா வாங்குறது.. சவரனுக்கு ரூ. 200 அதிகரிப்பு!
Anna university: அண்ணா பல்கலைக்கழக சம்பவம்.. கடுமையான தண்டனை தர வேண்டும்.. கனிமொழி
Nallakannu: ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு நல்லகண்ணு பெயர்... முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
மலையாள இலக்கிய உலகின் பிதாமகர்.. எழுத்தையே சுவாசித்தவர்.. மறக்க முடியாத எம்.டி. வாசுதேவன் நாயர்
வலுவிழந்தத காற்றழுத்த தாழ்வு.. ஒரு வாரத்திற்கு மிதமான மழைக்கே வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்!
Rajinikanth -Sivakarthikeyan meet D Gukesh.. அடுத்தடுத்து சர்ப்பிரஸை அனுபவித்த டி. குகேஷ்!
Tsunami: சுனாமி ஆழிப்பேரலை தாண்டவமாடி 20 வருஷமாச்சு.. மீனவர்கள் குடும்பம் குடும்பமாக அஞ்சலி!
Sabarimalai: இன்று சபரிமலை மண்டல பூஜை 2024 .. தங்க அங்கியில் ஐயப்பன் தரிசனம்.. குவியும் பக்தர்கள்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - டிசம்பர் 26, 2024...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
{{comments.comment}}