சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்கள் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தாலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. தேனி, திண்டுக்கல், தஞ்சை, விருதுநகர், நாகை,உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. குறிப்பாக வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 5 மணி நேரமாக கன மழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக வேதாரண்யத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 19 சென்டிமீட்டர் மிக கனமழை வெளுத்து வாங்கியது.
இதனால் தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் ஆறு போல் ஓடுகிறது. இந்தத் தொடர் மழை காரணமாக அப்பகுதியில் உள்ள நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதேபோல் அரியலூர் பகுதிகளில் பெய்த கனமழையால் அங்குள்ள பெரிய வெட்டி ஏரி நிரம்பியுள்ளது. அதிலிருந்து வரும் நீர் கலுங்கு ஓடைக்கு வந்து அருகில் உள்ள வயல்களில் நீர் சூழ்ந்து நெற்கதிர்கள் அனைத்தும் வீணாகின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இதனைத் தொடர்ந்து ஓடை அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும். இதற்கான உரிய நடவடிக்கைகளை விரைவாக எடுக்கும்படி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது தவிர நத்தம், விருதுநகர் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் சுமார் ஒரு மணி நேரமாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அதிலும் தஞ்சை மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக இன்று தஞ்சை மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகை பகுதிகளை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்காலில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 7 நாட்கள் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
விஜய் இப்பத்தான் கரெக்டான ரூட்டை எடுத்திருக்கிறார்.. புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பின் பின்னணி!
அதிமுகவுடன் தவெக கூட்டணி என்ற செய்தி பொய்யானது.. மக்கள் புறக்கணிப்பார்கள்.. புஸ்ஸி ஆனந்த்
Chennai Lakes: சென்னை ஏரிகளில் நீர் இருப்பு அதிகரிப்பு.. கூடுதல் மழை வந்தால் சூப்பரா இருக்கும்!
இலங்கை பிரதமராக டாக்டர் ஹரினி அமரசூரியா.. மீண்டும் பதவியேற்பு.. 24 கேபினட் அமைச்சர்களும் நியமனம்!
IMD Rain Update: தமிழ்நாட்டில்.. 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு!
Nayanthara beyond The Fairytale: அக்கா, உங்களுக்கு வெக்கம் மானம் இருக்கா.. ராதிகாவிடம் சீறிய தனுஷ்!
ஆமாம்.. உங்களுக்கு என்றைக்குமே நாங்கள் விஷக்காளான்கள்தான்.. எடப்பாடி பழனிச்சாமிக்கு உதயநிதி ஸ்டாலின்
நவம்பர் 18 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மீன ராசிக்காரர்களே.. ஆக்கப்பூர்வமாக சிந்தித்து, செயல்பட வேண்டிய நாள்!
{{comments.comment}}