Orange Alert: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டுக்கு.. இன்று.. மிக கன மழைக்கான எச்சரிக்கை!

Nov 12, 2024,05:25 PM IST

சென்னை: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ஆகிய  மூன்று மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. 


தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்து நேற்று முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.


இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது வட தமிழ்நாட்டை ஒட்டிய கடற்கரைப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே  நீடித்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் நவம்பர் 16ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி


மாலை 4 மணிக்குள் கனமழை பெய்யும் மாவட்டங்கள்: 




சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், மயிலாடுதுறை, தேனி, திண்டுக்கல், மதுரை, கன்னியாகுமரி, ஆகிய 13 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணிக்குள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது


இன்று மிக கனமழை:


சென்னை, திருவள்ளூர்,  செங்கல்பட்டு, ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது 12 முதல் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என்பதால் சென்னை உட்பட மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.


இன்று கனமழை: 


ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


நாளை கன மழை: 


சென்னை,திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம்,தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, ஆகிய 12 மாவட்டங்களுக்கு நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 


நாளை மறுநாள்: 


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல்,மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ஆகிய 27 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


நவம்பர் 15ஆம் தேதி: 


தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை தேனி திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி, சிவகங்கை, ஆகிய  மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


கோவை, நீலகிரி, திருப்பூர், ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 


நவம்பர் 16ஆம் தேதி: 


கோவை, நீலகிரி, தேனி ,திண்டுக்கல், திருப்பூர், ஆகிய ஐந்து மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கலைஞர் மருத்துவமனை டாக்டர் பாலாஜியை குத்தியால் குத்திய.. விக்னேஷ்வரன் மீது 5 பிரிவுகளில் வழக்கு!

news

யாருக்கும் பாதுகாப்பில்லை...அரசு டாக்டர் தாக்குதலுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்

news

திமுக உயர் நிலை செயல் திட்டக் குழு கூட்டம் கூடுகிறது.. முக்கிய முடிவுகள் குறித்து விவாதிக்க!

news

EXCLUSIVE: அண்ணாமலை மாற்றப்பட்டால் அடுத்த தலைவர் யார்?.. பாஜக கையில் 3 ஆப்ஷன்கள்!

news

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் டாக்டருக்கு கத்திக்குத்து.. எடப்பாடி பழனிச்சாமி, தமிழிசை கண்டனம்

news

டாக்டர் மீதான தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது.. இனி இப்படி நடக்காது.. உதயநிதி ஸ்டாலின்

news

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு செல்வோர்.. டாக்டர்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்க.. உதயநிதி ஸ்டாலின்

news

பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை.. நாங்க ரொம்ப கிளியரா இருக்கோம்.. எடப்பாடிபழனிசாமி

news

Cooking Tips: சுறுசுறு மீன் குழம்புக்கே டஃப் கொடுக்கும்.. Tasty மண்சட்டி பாகற்காய் குழம்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்