மீண்டும் மழை பெய்யப் போகுது.. அடுத்த 2 நாட்களில் பருவ மழை தீவிரமடையும்.. தமிழ்நாடு வெதர்மேன்

Nov 06, 2024,12:27 PM IST

சென்னை: சென்னையில் இன்று முதல் மீண்டும் வடகிழக்குப் பருவமழை வேகம் பிடிக்கும். படிப்படியாக தீவிரமடைந்து, டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை முதல் மழை நல்ல பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்கரை பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தெற்கு வங்க கடலின் மத்திய கடற்கரை பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழெடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது.



இதற்கிடையே வங்க கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால், சென்னையில் இருந்து தொடங்கும் மழையின் தீவிரம் படிப்படியாக அதிகரித்து, டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் தீவிரமடையும் என தமிழ்நாடு வெதர்மேன் தமிழ்நாடு மழை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

அதன்படி, இன்று காலை முதல் சென்னையில் இருந்து டெல்டா வரையிலான கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.பின்னர் படிப்படியாக மழையின் தீவிரம் அதிகரித்து ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய கடலோர மாவட்டங்களிலும் வெள்ளிக்கிழமை முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
 
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், சென்னை, புதுச்சேரி, கடலூர் முதல் ராமேஸ்வரம் போன்ற கடலோர மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும்.  அப்போது இந்த பருவமழை தென் மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை  முதல் அதிரடியாக மழை பெய்யக்கூடும்.

அதேபோல் அடுத்த 2 நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால் மற்றும் நாகை மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.  

வெள்ளிக்கிழமை ராமநாதபுரம் மற்றும் துட்டி கடலோரப் பகுதிகளில் சில இடங்களில் கனமழை பெய்யும்.சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.   சென்னையில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதால் உங்கள் குடை மற்றும் ரெயின்கோட் தவறாமல் எடுத்துச் செல்லுங்கள் என தனியார் வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் அபார வெற்றி.. 2 வது முறையாக அதிபராகிறார்!

news

Lunch Box Recipe: இன்னிக்கு என்ன லஞ்ச்சுக்கு.. சூப்பரான கொள்ளு துவையல்.. வாங்க சாப்பிடலாம்!

news

கில்லி.. எதிர்கால தமிழக அரசியலில் .. தவிர்க்க முடியாத புள்ளி தான்.. ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்

news

மாணவர்களிடமிருந்து புது எனர்ஜி கிடைக்கிறது.. கோவையில் ஹேப்பி மோடுக்குப் போன முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

ஓவியா புயலுடன் இணையும்.. ஸ்பின் புயல் ஹர்பஜன் சிங்.. கூட யாரெல்லாம் இருக்காங்க பாருங்க!

news

மீண்டும் மழை பெய்யப் போகுது.. அடுத்த 2 நாட்களில் பருவ மழை தீவிரமடையும்.. தமிழ்நாடு வெதர்மேன்

news

Gold rate.. நேற்று சரிந்த தங்கம் இன்று மீண்டும் உயர்ந்தது.. அடடா!

news

US presidential election results 2024: வேகம் எடுக்கும் கமலா.. 210 வாக்குகள்.. டிரம்ப்புக்கு 230!

news

நவம்பர் 05 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

அதிகம் பார்க்கும் செய்திகள்