மேலடுக்கு சுழற்சி.. தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில்.. இன்று கன மழை பெய்ய வாய்ப்பு

Oct 23, 2024,10:35 AM IST

சென்னை: மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நேற்று தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளிலும் வட உள் மாவட்டங்களிலும் பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. 

கோவையில் கன மழை: 



குறிப்பாக கோவையில் மாவட்டத்தில் நேற்று பகலில் வெயில் அடித்தாலும் மாலையில் பிடித்த மழை நள்ளிரவு வரை அநேக இடங்களில்  இடைவிடாமல் வெளுத்து வாங்கியது. அவிநாசி மேம்பாலம், சிவானந்தா காலனி, காந்திபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் அப்பகுதி முழுவதும் வெள்ளைக்காடானது.அதேபோல் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. 

கோவை அருகே காரமடையில் பெய்த கன மழையால் அங்குள்ள  ஓடைகளில் நள்ளிரவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இந்த மழை வெள்ளத்தில் கார்கள் அடித்து செல்லப்பட்டன.  மாநகரத்தில் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் கோவை மாநகராட்சி ஊழியர்கள் மழை நீரை வெளியேற்றும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தற்போது மழைநீர் வடிய ஆரம்பித்து இயல்பு நிலைக்கு மாறி வருகிறது.

இந்த நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி இன்று கோவை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூரில் இடி,மின்னலுடன் மழை: 

அதேபோல் திருப்பூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரமாக பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் நீர் குளம் போல் தேங்கி வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இது தவிர கோபிசெட்டிபாளையம், ஆம்பூர், தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்  இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

ஆம்பூர் அருகே மின்னல் தாக்கி தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த தியணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருவம் பகுதியில் மின்னல் தாக்கி விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அவரது உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
 
கோவை மாவட்டத்தில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை  அதிகபட்சமாக 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
திண்டுக்கல்லில் 6 சென்டிமீட்டர், நீலகிரி மற்றும் திருப்பூரில் தல 5 சென்டிமீட்டர் வேடசந்தூர் மற்றும் சேலத்தில் தல 4 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இன்று கனமழைக்கு வாய்ப்பு: 

இதனிடையே மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல் தேனி ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

அமரன் படத்தினால் மனஉளைச்சல் அடைந்த மாணவன்.. ரூ. 1.1 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ்!

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

கொங்கு நாட்டு நெல்லி, தக்காளி சட்னி + multigrains ஆட்டா அடை.. செம காம்போ மக்களே.. சாப்ட்டு பாருங்க

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்