சென்னை உள்பட 11 மாவட்டங்களில்.. இன்று கன மழை பெய்ய வாய்ப்பிருக்கு.. குடையோடு போங்க!

Nov 07, 2024,06:28 PM IST

சென்னை: தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உட்பட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் பருவ மழை படிப்படியாக தீவிரமடைந்து வருவதால் பெரும்பாலான பகுதிகளில்  கன மழை பெய்து வருகிறது. இதனால் அனேக இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. குறிப்பாக நேற்று இரவு சென்னை திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு நல்ல மழை பெய்தது. 


அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.  வேளாங்கண்ணி, சீர்காழி, மயிலாடுதுறை, உள்ளிட்ட  பகுதிகளில் காலையில் வெயில் அடித்தாலும் மாலை இரவு நேரங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் அப்பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.


சென்னை மழை: 




சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் மழை விட்டு விட்டு பெய்து வந்த நிலையில், 

இன்று அதிகாலை 6:00 மணிக்கு தொடங்கிய மழை தற்போது வரை  விட்டு விட்டு பெய்து வருகிறது. அடையாறு, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர்,  மந்தவெளி, அண்ணா சாலை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை  பெய்து வருகிறது. இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் குளுகுளுவென இதமான சூழல் நிலவி வருகிறது. 


ஒரு சில இடங்களில் வானவிலும் தென்பட்டதால் மக்கள் அதனை ரசித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனிடையே தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நீடித்து வருவதால் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


இன்று கன மழை:


சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்