South Tamil Nadu rains..தென் தமிழகத்தில் மழை குறையும்.. 17ம் தேதி முதல் அடுத்த ரவுண்டு - பிரதீப்ஜான்

Dec 14, 2024,05:34 PM IST

சென்னை: தென் தமிழகத்தில் இன்றுடன் படிப்படியாக மழையின் தீவிரம் குறையும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். ஆனால் புதிதாக உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழக கடலோர பகுதிகளில் மீண்டும் டிசம்பர் 17 ஆம் தேதி முதல் கனமழை தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.


வடகிழக்குப் பருவமழை மிக மிக தீவிரமடைந்து தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களான நாகை, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம், தர்மபுரி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. 




தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் வேகமாக நிறைந்து வருகிறது. 


இதற்கிடையே நாளை தெற்கு அந்தமான் கடற்கரை பகுதிகளில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் தமிழ்நாட்டில் 16, 17 ,18, ஆகிய மூன்று நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தமிழ்நாடு மழை குறித்து ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக தென்காசி, தூத்துக்குடி, மற்றும் நெல்லை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.  நேற்றும் பெரிய அளவில் மழை பதிவாகியுள்ளது.  ஆனால் அதற்கு முந்தைய நாள் போல் மழையின் தீவிரம் இல்லை. தென் தமிழகத்தில் இன்று முதல் மழையின் தீவிரம் படிப்படியாக குறையும்.


தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, நாளை மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் வரும் டிசம்பர் 17-ம் தேதி முதல் தமிழக கடலோரப் பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கும் என தமிழ்நாடு வெதர்மேன்  தெரிவித்துள்ளார்.


தென் தமிழகத்தில் 13.12.2024 இரவு 10.30 மணி வரை பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்)

 

தென்காசி  மாவட்டம்


கடனாநதி அணையில் 211.6 மி.மீ, சிவசைலம் 182.8 மி.மீ,

கோவிந்தபேரி 114 மி.மீ,

ஆழ்வார்குறிச்சி 108 மி.மீ மழையும் பதிவாகி உள்ளது.


 தூத்துக்குடி மாவட்டம்


புதுக்கோட்டை 170.4 மி.மீ,

திருத்தொண்டநல்லூர் 137.2 மி.மீ,

தேமாங்குளம் 106 மி.மீ,

கீழத்தட்டப்பாறை 101.6 மி.மீ,

அம்மன்புரம் 88 மி.மீ,

காயல்பட்டினம் 77.6 மி.மீ மழை பெய்துள்ளது.


திருநெல்வேலி மாவட்டம்


விக்ரமசிங்கபுரம் 122,

இட்டமொழி 107.6,

திசையன்விளை 72.8,

குட்டம் 63.6


விருதுநகர் மாவட்டம்


மண்டபசாலை 101.6,

அமனகுத்தம் 97.2,

சின்னமூப்பன்பட்டி 76.8,

ஒண்டிப்புலி நாயக்கனூர் 70,

அருப்புக்கோட்டை 68.8,

ஆமத்தூர் 59.6,

கல்குறிச்சி 59.6,


ராமநாதபுரம் மாவட்டம்

கருகாலக்குடி 53.2,

கோவிலங்குளம் 44,

கடலாடி 40,


தேனி மாவட்டம்


மயிலாடும்பாறை 53.6,

குமணந்தோலு 42.8,

மேலகூடலூர் 40,

கம்பம் 33.6


மதுரை மாவட்டம்


சிவரக்கோட்டை 76.8,

சிந்துபட்டி 60.4,

கல்லிகுடி 58,

குறையூர் 48 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

CPI (M).. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் தேர்வு

news

சிந்து வெளிப் புதிர்.. விடை கண்டுபிடிப்போருக்கு.. 1 மில்லியன் டாலர் பரிசு.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

அமெரிக்காவில் வேகமாக பரவும் இன்ஃபுளுயன்சா வைரஸ்.. வழக்கமாக குளிர் காலத்தில் பரவுவதுதானாம்!

news

சீனாவில் பரவும் வைரஸ்... இந்தியாவிற்கு பாதிப்பு வருமா?... மத்திய சுகாதாரத்துறை விளக்கம் இதுதான்!

news

டெல்லிக்கு மஞ்சள் அலர்ட்.. படுத்தி எடுக்கும் அடர் பனிமூட்டம்.. 400க்கும் அதிகமான விமான சேவை பாதிப்பு

news

இரவு சாப்பிட்ட பிறகு ஜீரண கோளாறு ஏற்படாமல் இருக்கணுமா?...இதை டிரை பண்ணி பாருங்க

news

மார்கழி 22 திருப்பள்ளியெழுச்சி பாடல் 2 : அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்

news

மார்கழி 22 ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 22 : அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - ஜனவரி 05, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்