கன்டெய்னர் லாரிக்குள் ஹரியானா கொள்ளையர்கள்.. சிக்கியது எப்படி.. டிஐஜி உமா பரபரப்புத் தகவல்கள்!

Sep 27, 2024,03:29 PM IST

நாமக்கல்:   நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கண்டெய்னர் லாரியை கைப்பற்றிய போலீசார் அதை வளைத்துப் பிடித்தனர். அந்த லாரிக்குள் கேரளா ஏடிஎம்களில் கொள்ளை அடித்த கொள்ளையர்கள் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. தப்பி ஓட முயன்ற ஒரு திருடன் என்கவுண்டர் செய்து சுட்டுக் கொல்லப்பட்டார். சினிமாவில் வருவது போல நீண்ட சேசிங் மூலம் இந்தக் கும்பலை போலீஸார் வளைத்துப் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 


இந்த சம்பவம் தொடர்பாக சேலம் சரக டிஐஜி உமா பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட கொள்ளையர்கள் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள். இவர்களை வெப்படை அருகே சன்னியாசிப்பட்டி என்ற இடத்தில் வைத்து மடக்கினோம். அனைவருமே ஊரகப் பகுதிகளில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களைக்  குறி வைத்துக் கொள்ளையடிப்பவர்கள். போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த நபரின் பெயர் ஜூமான். காயமடைந்தவர் பெயர் அஸார் அலி. சம்பந்தப்பட்ட கும்பல் மீது வேறு வழக்குகள் இருப்பதாக இதுவரை தெரியவில்லை. கிருஷ்ணகிரி கொள்ளையில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.  இன்ஸ்பெக்டரைத் தாக்கி விட்டுத் தப்பி ஓட முயன்றதால்தான் ஜூமான் சுட்டுக் கொல்லப்பட்டார். கூகுள் மேப் மூலமாக இவர்கள் ஏடிஎம் மையங்களை கண்டறிந்து கொள்ளையடித்து வந்துள்ளனர் என்று அவர் கூறினார்.





முன்னதாக, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பச்சாபாளையம்  பகுதியில் ஒரு  கண்டெய்னர் லாரி மிக வேகமாக வந்து கொண்டிருந்தது. அந்த லாரி மோதும் வகையில் வந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனைதொடர்ந்து அந்த லாரி இரண்டு டூ வீலர் மற்றும் நான்கு கார்களின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதனை அறிந்த போலீசார் அந்த வாகனத்தை பின் தொடர்ந்து சென்று கண்டெய்னர் லாரியை நிறுத்த முயற்சி செய்தனர். இருப்பினும் லாரி நிற்காமல் சென்றதால் கற்களை வீசி கண்டெய்னர் லாரியை நிறுத்தினர். இதனால் வாகன ஓட்டுனர் நிலைதடுமாறி லாரியை நடுரோட்டில் நிறுத்திவிட்டு தப்பித்து ஓடிவிட்டார். 


ஈரோட்டில் இருந்து சேலம் செல்லும் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு கண்டெய்னர் லாரியை போலீசார் ஆய்வு செய்தனர்.அப்போது இந்தக் கண்டெய்னர் லாரியில் சிலர் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. அவர்களை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். இந்த சம்பவத்தின்போது மொத்தம் 5 பேர் பிடிபட்டனர். லாரியிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் ரூ. 66 லட்சம், ஒரு கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.


தமிழ்நாடு போலீஸாரின் இந்த துணிகர செயல் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது கேரளாவிலிருந்து போலீஸார் தமிழ்நாடு விரைந்து வருகின்றனர்.  இந்த கொள்ளையர்களுக்கு கிருஷ்ணகிரி ஏடிஎம் கொள்ளையிலும் தொடர்பு இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். எனவே கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சிங்கம்-கழுகு கூட்டணியா?.. சிலாகிக்கும் நா.த.க.. சீமான் சொன்ன பதில்.. ரஜினியுடன் சந்திப்பு ஏன்?

news

ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!

news

Drumsticks price.. என்னடா இது.. முருங்கைக்கு வந்த கிராக்கி.. விர் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை!

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்