மக்களே ரெடியா.. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 112% கூடுதலாக இருக்கும்.. வானிலை மையம் அறிவிப்பு!

Oct 01, 2024,06:36 PM IST

சென்னை : தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 112 சதவீதம் கூடுதலாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தை யாராலும் மறக்க முடியாது. முதலில் சென்னை உள்ளிட்ட நான்கு வட மாவட்டங்களை வெள்ளம் வெளுத்தெடுத்தது. அடுத்து தென் கோடி தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களை உண்டு இல்லை என்று செய்தது. இந்த நிலையில் இந்த  வருடம் வட கிழக்குப் பருவமழைக்காலத்தில் தமிழ்நாட்டுக்கு 112 சதவீத அளவுக்கு கூடுதல் மழை பெய்யும் வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இந்த ஆண்டு இதுவரை கேரளா, ஆந்திராவை தென் மேற்குப் பருவ மழை உருக்குலைத்து விட்டது. கேரளாவில் பயங்கர நிலச்சரிவே ஏற்பட்டது. இதனால் இந்த ஆண்டு நவம்பர், டிசம்பரில் எவ்வளவு மழை பெய்து இன்னும் என்னென்ன பாதிப்புக்கள் ஏற்படுமோ என மக்கள் பயத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் இந்திய வானிலை மையம் வடகிழக்கு பருவமழழை குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.




பல்வேறு மாநிலங்களில் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக ஏற்கனவே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் 18ம் தேதி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஒவ்வொரு பகுதிகளிலும் பருவமழை விலகலுக்கான தேதிகள் குறித்து இந்திய வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டடு வருகிறது. 


இந்நிலையில் இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். தமிழகம், கேரளா, உள் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வழக்கமாக பெய்யும் பருவமழையை விட இந்த ஆண்டு 112 சதவீதம் அதிகமாக மழை பெய்யும் என தெரிவித்துள்ளது. 


வடமாவட்டங்களில் அதிக மழைப் பொழிவும், தென் மாவட்டங்களில் குறைந்த மழைப்பொழிவும் இருக்கும். இந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரை தமிழகத்தில் பருவமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மாநிலங்களில் வழக்கத்தை விட அதிகமாக மழை பெய்யும் என்றம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனால் இந்த முறையும் பெரு மழை மற்றும் வெள்ளப் பெருக்குக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதை மறுக்க முடியாது. இதனால்தான் தமிழ்நாடு அரசு இப்போதே துரிதமான நடவடிக்கைகளைத் தொடங்கி விட்டது. வட கிழக்குப் பருவ மழையை சமாளிப்பது தொடர்பான நடவடிக்கைகளை இப்போதே அரசு முடுக்கி விட்டுள்ளது. நோடல் அதிகாரிகளும் கூட நியமிக்கப்பட்டு வருகின்றனர். தொடர் நடவடிக்கைகள் காரணமாக மக்கள் மனதில் பயம் இல்லை. அதேசமயம், மக்களும் கூட, வெள்ளத்தையும், பெரு மழையையும் எதிர்பார்த்து அதற்கேற்ற முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்