விரிவடையும் புதுமைப் பெண் திட்டம்.. அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் இனி மாதம் ரூ. 1000 உதவி!

Dec 18, 2024,10:58 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் தற்போது அரசுப் பள்ளி மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டம் சார்பில் மாதம் ரூ. 1000 உதவித் தொகை வழங்குவது போல இனி அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கும் மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்தை தூத்துக்குடியில் வருகிற 30-ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதன் மூலம் புதுமைப் பெண்கள் திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது.


திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறன்றன. குறிப்பாக பெண்களுக்கு பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றாக, மூவலூர் ராமாமிர்தம் உயர் கல்வி திட்டத்தை, புதுமைப்பெண் திட்டமாக கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி முதல் மாற்றி தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதை முதல்வர் மு க ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.


தமிழ்நாட்டில் 6ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று மேற்படிப்புக்காக கல்லூரிகளில் சேரும் மாணவிகள் பாடப்புத்தகம், பொது அறிவு நூல்கள், இதழ்கள், போன்றவை வாங்கிட அவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த மாதம் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்குகளில் வர வைக்கப்படும் என அப்போது முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி கடந்த ஆண்டு பிப்ரவரி எட்டாம் தேதி புதுமைப்பெண் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.




இந்தத் திட்டத்திற்காக ரூ. 370 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று மேற்படிப்பை தொடரும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஒரு வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட மாணவிகள் இருந்தாலும் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம் என கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டது.


இந்த திட்டத்தில் 2 லட்சத்து 73 ஆயிரம் மாணவிகள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெற்று பயனடைந்து வருவதாகவும், இதனால் உயர் கல்வி சேர்க்கையில் முதலாம் ஆண்டு மாணவிகள் 34 சதவிகிதம் அதிகரித்து உள்ளதாகவும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 


மாணவிகளுக்கு வழங்குவது போலவே  மாணவர்களுக்காகவும் தமிழ் முதல்வன் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. ரூ. 360 கோடி நிதி ஒதுக்கீட்டில் 6 முதல் 12 வரை  அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் திட்டமாக இது அமல்படுத்தப்பட்டு வருகிறது. 


இந்த நிலையில் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.  அதன்படி இந்தத் திட்டத்தில் தற்போது அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளும் இணைக்கப்படுகிறார்கள். இனி அவர்களுக்கும் மாதம் ரூ. 1000 உதவித் தொகை கிடைக்கும். இந்த திட்ட விரிவாக்கத்தை தூத்துக்குடியில் டிசம்பர் 30ஆம் தேதி தொடங்கி வைக்க இருக்கிறார் முதல்வர் மு க ஸ்டாலின்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

புதுச்சேரியில்.. டிசம்பர் 28ம் தேதி பா.ம.க பொதுக்குழு கூட்டம்.. டாக்டர் அன்புமணி ராமதாஸ்

news

புஷ்பா-2.. ஜாமினை ரத்து செய்யக் கோரி.. சுப்ரீம் கோர்ட்டை அணுகும் போலீஸ்.. அல்லு அர்ஜூனுக்கு சிக்கல்

news

Laapataa Ladies.. ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலில் இடம் பெறத் தவறியது.. இந்தியாவுக்கு ஏமாற்றம்!

news

தென்னிந்தியர்கள் தேவையில்லை.. நொய்டா நிறுவனத்தின் அறிவிப்பால்.. கொந்தளிக்கும் சோசியல் மீடியா!

news

Todays gold rate: தங்கம் விலை நேற்று உயர்ந்தது.. இன்று கொஞ்சம் குறைந்தது.. சவரன் எவ்வளவு தெரியுமா?

news

Srivaikudam Station Master.. தீரமாக செயல்பட்ட ஸ்டேஷன் மாஸ்டர் ஜாபர் அலிக்கு.. ரயில்வே உயரிய விருது!

news

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு.. ஆர். அஸ்வின் திடீர் அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி!

news

விரிவடையும் புதுமைப் பெண் திட்டம்.. அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் இனி மாதம் ரூ. 1000 உதவி!

news

வட சென்னையில் தொடங்கி.. படிப்படியாக மழை பரவும்.. இன்றும், நாளையும் பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன்

அதிகம் பார்க்கும் செய்திகள்