சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் சந்தையில் வரத்து குறைந்ததால் ஒரு கிலோ பூண்டு ரூ.450க்கு விற்ப்படுகிறது.
சமையலில் பயன்படுத்தப்படும் முக்கிய பொருளாக பூண்டு உள்ளது.இரத்த அழுத்தம், கொழுப்பின் அளவை குறைத்தல், இதய நோய், பக்கவாதம் உள்ளிட்ட நோய்களில் இருந்து நம்மை காக்கும் தன்மை பூண்டிற்கு உண்டு. இத்தகைய பூண்டு கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பூண்டு தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது.
தமிழகத்தை பொருத்த வரை காய்கறிகளின் விலை பருவமழை காரணமாக கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில், வட மாநிலங்களில் இருந்து ஓமலூர் சந்தைக்கு வரும் பூண்டின் விலையும் உயர்ந்துள்ளது.
வெளி மாநிலங்களில் பெய்து வரும் கனமழை மற்றும் விலைச்சல் குறைவு காரணமாக பூண்டின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வழக்கமாக கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் இருந்து ஓமலூர் சந்தைக்கு 100 டன் அளவிற்கு வரும் பூண்டு தற்போது 20 டன் அளவிற்கு மட்டுமே வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் பூண்டிற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
வரத்து குறைந்த காரணத்தினால் பூண்டின் விலை கிடுகிடு வென உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ பூண்டு தற்போது 450க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீலகிரியில் விளைச்சல் செய்யப்படும் பூண்டின் விலையும் அதிகரித்து ரூ.350 முதல் ரூ.500 வரை விற்கப்படுகிறது. இந்த பூண்டின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
குறுகியகால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
தேசியவாதியான ஐயா குமரி ஆனந்தன் மறைவு தமிழகத்துக்கும் இலக்கிய உலகுக்கும் பேரிழப்பு: அண்ணாமலை
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பா..? வானிலை மையம் விளக்கம்!
நீட் எதிர்ப்பு என்பது... முதல்வர் ஆடும் சுயநல நாடகம்: பாஜக தலைவர் அண்ணாமலை!
இரத்தக்களறி (சிறுகதை)
4 நாட்களுக்கு பின்னர் இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை... சவரனுக்கு ரூ.520 உயர்வு!
நன்றி அப்பா.. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள்.. குமரி அனந்தன் குறித்து டாக்டர் தமிழிசை உருக்கம்!
இலக்கியச் செல்வர்.. காங்கிரஸ் மூத்த தலைவர்.. காமராஜரின் சிஷ்யர்.. மறைந்தார் குமரி அனந்தன்!
மதுரை குலுங்க.. வைகை ஆற்றில் கள்ளழகர்.. வந்திறங்க போறாரு.. வெளியானது தேதி!
{{comments.comment}}