சென்னை: தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் 8ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்றும், வட தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்சமாக 111 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் காணப்படும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகி அனல் காற்று வீசுவதுடன், பொதுமக்களை மயக்கம் அடையச் செய்யும் அளவிற்கு வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. பெரும்பாலான வட தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்சமாக 111 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி வருகிறது. மேலும், அனல் காற்றும் வீசி வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் 8ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் அறிவிப்ப வெளியிட்டுள்ளது. ஒரு பக்கம் மழை, மற்றொரு பக்கம் வாட்டி வதைக்கும் வெயில் என்று வானிலை மையத்தின் அறிவிப்பை பார்த்து பொது மக்கள் இதை சந்தோஷமாக அனுபவிப்பதா அல்லது வெயிலை நினைச்சு அஞ்சுவதா என்று தெரியாமல் விழித்து வருகின்றனர்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், வெப்ப அலை வீசும் தென்தமிழக மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், மே 3ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் இதர மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும்.
மே 3ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசும். அங்கு சமவெளி பகுதிகளில் ஒரு சில இடங்களில் 102 முதல் 109 டிகிரி பாரன்ஹீட், இதர மாவட்டங்களில் சமவெளி பகுதிகளில் 100 முதல் 104 டிகிரி பாரன்ஹீட், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 97 முதல் 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை வானம் இன்று ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை 82 முதல் 102 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கக்கூடும்.
நடப்பு ஆண்டில் மார்ச், ஏப்ரல் மாதங்களை பொருத்தவரை, வழக்கமான அளவை விட 83 சதவீதம் குறைவான அளவு மழை பெய்துள்ளது. அனைத்து மாவட்டங்களில் மழைப்பொழிவு குறைந்துள்ளது.
கொளுத்தும் வெயிலுக்கு நடுவே தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் நேற்று முன்தினம் மழை பெய்து இருக்கிறது. காலை 8.30 மணி வரையிலான நிலவரப்படி, குமரி மாவட்டம் தக்கலையில் 5 சென்டிமீட்டர் கோழிப்போர் விளை,சுருளக்கோடு மற்றும் நெல்லை மாவட்டம் மாஞ்சோலையில் தலா 3 சென்டிமீட்டர், இது தவிர கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை, முள்ளங்கினாவிளை, சிற்றாறு, சிவலோகம், திற்பரப்பு, களியல், பெருஞ்சாணி அணை, நெல்லை மாவட்டம் காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, தேனி மாவட்டம் போடிநாயக்கனூர், மதுரை மாவட்டம் விரகனூர் அணை பகுதிகளில் தலா 2 மற்றும் 1 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.
தென் மாவட்டம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு லேசான மழை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}