மராத்தி பேசாவிட்டால் பளார்னு அறையுங்கள்.. தமிழ்நாட்டின் தைரியம் நமக்கு வேண்டும்.. ராஜ் தாக்கரே

Mar 31, 2025,06:02 PM IST

மும்பை: தமிழ்நாட்டைப் பாருங்கள்.. இந்தி வேண்டாம் என்று தைரியமாக  சொல்கிறது. கேரளாவும் கூட வேண்டாம் என்று சொல்கிறது. அந்த தைரியம் நமக்கும் வேண்டும். மராத்தியில் யாராவது பேச மறுத்தால் முகத்திலேயே அடியுங்கள் என்று மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கூறியுள்ளார்.


மகாராஷ்டிராவில் நீண்ட காலமாகவே இந்தி பேசுவோருக்கு எதிரான போக்கு இருந்து வருகிறது. அங்குள்ள மராத்தியர்களின் வாழ்வுரிமையைப் பறிப்பதாக பீகார் உள்ளிட்ட வட மாநிலத்தவர்களுக்கு எதிரான மோதல்கள் அவ்வப்போது வெடித்தும் வருகின்றன.


இந்த நிலையில் தமிழ்நாட்டின் இந்தி திணிப்பு எதிர்ப்புப் போக்கை மகாராஷ்டிராவின் முக்கிய அரசியல் கட்சியான மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே வரவேற்றுள்ளார். மும்பை சிவாஜி பார்க்கில் நடந்த குடி பட்வா பேரணியில் கலந்து கொண்டு அவர் பேசும்போது கூறியதாவது:




மும்பைக்கு வந்து வாழும் சிலர் சொல்கிறார்கள், மராத்தியில் பேச மாட்டோம் என்று. அப்படிப் பேசுவோருக்கு முகத்திலேயே அடி விழும்.  ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு மொழி உண்டு. அந்த மொழியை நாம் மதிக்க வேண்டும். மும்பையில் மராத்தி மதிக்கப்பட வேண்டும்.


நாளை முதல் ஒவ்வொரு வங்கியாக, நிறுவனமாக செக் பண்ணுங்க. மராத்தியில் பேசுகிறார்களா என்று சோதனை பண்ணுங்க. அனைவரும் மராத்திக்கு ஆதரவாக திரண்டு வர வேண்டும்.


தமிழ்நாட்டைப் பாருங்கள். இந்தி வேண்டாம் என்று அவர்கள் தைரியமாக சொல்கிறார்கள். கேரளாவும் கூட தைரியமாக நிராகரித்துள்ளது.


ஜாதியால் மக்கள் பிரியக் கூடாது. நமது மாநிலத்தை ஆளுவோர் திட்டமிட்டு மக்களிடையே ஜாதி துவேஷத்தைப் பரப்பி வருகிறார்கள். மக்கள் பிரச்சினைகளிலிருந்து திசை திருப்ப ஜாதியைக் கையில் எடுக்கிறார்கள்.


மகாராஷ்டிராவில் உள்ள இளைஞர்களுக்கு நான் விடுக்கும் ஒரே கோரிக்கை, முதலில் வாட்ஸ் ஆப்பில் வரலாற்றைப் படிப்பதைத் தவிருங்கள். அது அரசியல் ரீதியாக உங்களைப் பிளவுபடுத்த பரப்பபப்படும் பொய். அதிலிருந்து வெளி வாருங்கள். மராத்தியர்களாக ஒன்றிணையுங்கள். அதானிக்கு அள்ளி அள்ளி கொடுக்கப்படும் நிலங்கள் குறித்த பிரச்சினையிலிருந்து இவர்கள் நம்மைத் திசை திருப்பப் பார்க்கிறார்கள் என்றார் அவர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வக்பு வாரிய சட்ட மசோதா நாளை தாக்கல்.. எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி எம்.பிக்கள் முடிவு

news

தமிழ்நாட்டில் வெப்பநிலை படிப்படியாக ..2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்..!

news

வழக்கத்தைவிட.. ஏப்ரல், ஜூனில் வெப்பம் அதிகரிக்கும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!

news

Emburan Movie: பெரியாறு அணை குறித்து அவதூறு கருத்துகளை நீக்குக.. பண்ருட்டி வேல்முருகன்..!

news

Madurai Chithirai Thiruvizha 2025: மீனாட்சி அம்மன் கோவிலில்..ஏப்ரல் 29ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்..

news

அருவறுப்பான ஆண்களே அழிஞ்சு நாசமா போங்க.. பாடகி சின்மயி ஆவேசம்!

news

கும்பகோணம் வெற்றிலைக்கும் தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு!

news

டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு.. ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்.. வெளியானது அரசு உத்தரவு..!

news

தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்.. அமித்ஷா கூறியது நகைச்சுவை:விசிக தலைவர் திருமாவளவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்