சென்னை: பரந்தூர் செல்லும் தவெக தலைவர் விஜயால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. போராட்டக் குழுவினரின் கோரிக்கைகளை அரசுக்கு பரிந்துரையாக கூறலாம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த 3 வருடமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பரந்தூர் விமான நிலையத் திட்டம் தாமதமாகி வருகிறது. விவசாய நிலங்களில் விமான நிலையத்தை அமைத்தால் தங்களது வாழ்வாதாரம் மட்டுமல்லாமல், சென்னையைச் சுற்றிலும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று விவசாயிகளும், கிராமத்தினரும் கூறி வருகின்றனர்.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் கிராம மக்களையும் போராட்ட குழுவினர்களையும் சந்திப்பதற்காக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சார்பில், மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தனர். இதனையடுத்து தவெக தலைவர் விஜய் அப்பகுதி மக்களை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக போராடி வரும் போராட்டக் குழுவினர்களையும், பொதுமக்களையும் விஜய் இன்று சந்தித்தார்.
இந்நிலையில், பரந்தூர் செல்லும் தவெக தலைவர் விஜய்யால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வந்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக,சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், பரந்தூர் செல்லும் தவெக தலைவர் விஜயால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. போராட்டக் குழுவினரின் கோரிக்கைகளை அரசுக்கு பரிந்துரையாக கூறலாம். நானும் மூன்றரை வருடங்களாக பரந்தூர் சென்று மக்களை சந்தித்து வருகிறேன் என்றார் செல்வப் பெருந்தகை.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!
சபரிமலையில் நடிகர்கள் கார்த்தி ரவி மோகன் சுவாமி தரிசனம்!
Today gold rate: வரலாறு காணாத தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
வக்பு சட்டத்தை கண்டித்து.. கடை அடைப்பு போராட்டம் நெல்லையில் பரபரப்பு..!
கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!
அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்
குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!
good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?
என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!
{{comments.comment}}