முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நேரில் சென்று அஞ்சலி.. டெல்லியில்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Dec 27, 2024,06:22 PM IST

டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான  மன்மோகன் சிங் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்த டெல்லி வந்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.


முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், வயது மூப்பின் காரணமாக நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். நேற்று திடீரென அவரது உடல்நிலை மோசமானதால் அவசர சிகிச்சைகாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரவு 9:51 மணிக்கு அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அவரது உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.




மன்மோகன் சிங் மறைவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு,  துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தங்கர்,  பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், எதிர்கட்சித்  தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின், அமைச்சர்கள் எம்பிக்கள் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள்  தங்களின் இரங்கல்களை தெரிவித்துள்ளனர். பல்வேறு தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இறுதி மரியாதை செலுத்தும் வகையில் டெல்லி புறப்பட்டுச் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்