இன்று பிரதமருடன் தமிழக முதல்வர் சந்திப்பு...இதற்கு தான் டில்லி பயணமா?

Sep 27, 2024,10:24 AM IST

சென்னை:   சென்னையில் இருந்து புறப்பட்டு இரவு டெல்லி சென்றடைந்த முதல்வர் மு க ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழ்நாட்டிற்கான நிலுவை நிதியை விடுவிக்க வலியுறுத்த உள்ளதாக சொல்லப்படுகிறது.


திமுக சார்பில் பவள விழா மற்றும் முப்பெரும் விழா சென்னையில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், பேரறிஞர் அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில்  வரும் செப்டம்பர் 28ஆம் தேதி பவள விழா கொண்டாடப்பட உள்ளது.




இதற்காக திமுக தொண்டர்களின் அழைப்பு கடிதத்தில், தான் செப்டம்பர் 26 மற்றும் 27 தேதிகளில் தமிழ்நாட்டின் நிதியைக் கேட்டு பெற இரண்டு நாட்கள் பிரதமரை சந்திக்க டெல்லி செல்ல இருக்கிறேன் எனக் கூறியிருந்தார் முதல்வர் ஸ்டாலின். அதேபோல் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, கல்வி மற்றும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி தொடர்பாக விரைவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வலியுறுத்த இருக்கிறேன் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில் நேற்று மாலை சென்னையில் இருந்து புறப்பட்ட முதல்வர் மு க ஸ்டாலின் இரவு டெல்லி வந்தடைந்தார். அப்போது விமான நிலையத்தில் எம்பி டிஆர் பாலு, ஏ கே எஸ் விஜயன் உள்ளிட்டோர் முதல்வர் மு க ஸ்டாலினை வரவேற்றனர்.


இதனைத் தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார் முதல்வர் மு க ஸ்டாலின். அப்போது பள்ளிக்கல்வி  திட்டத்திற்கான நிதியை விடுவிக்க வேண்டும், இரண்டாம் கட்ட மெட்ரோவுக்கான நிலுவையில் உள்ள நிதியை விடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முதல்வர் வலியுறுத்த இருக்கிறார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Chennai Rains.. அண்ணாநகரை வச்சு செஞ்ச மழை.. 1 மணி நேரத்தில் 100 மி.மீ.. இது லிஸ்ட்லேயே இல்லையே!

news

Deepavali special sweet: செம டேஸ்ட்டு.. சூப்பர் ஸ்வீட்டு.. தீபாவளிக்கு முந்திரி கேக் செய்யலாமா?

news

ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் தங்கம் விலை: அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

வீரராக பிறந்து வீரராக மறைந்தவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

news

கங்குவா பட எடிட்டர் நிஷாத் யூசுப் திடீர் மரணம்.. வீட்டில் மர்மமான முறையில் உயிரிழப்பு!

news

இட்லி-கறிக்குழம்பு .. தலை தீபாவளி கொண்டாடும் புது மாப்பிள்ளைக்கான ஸ்பெஷல் காம்போ!

news

தீபாவளி 2024 : பாரம்பரிய முறையில் எண்ணெய் வைத்து குளிக்க இதுதான் நல்ல நேரம்!

news

Monsoon: சூடு பிடிக்கும் மழைக்காலம்.. நோய்களைத் தவிர்ப்பது எப்படி.. மாணவர்களுக்கு சூப்பர் டிப்ஸ்!

news

அக்டோபர் 30 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

அதிகம் பார்க்கும் செய்திகள்