உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரான பின்னர்.. முதல் அமைச்சரவைக் கூட்டம்.. அக். 8ம் தேதி!

Oct 02, 2024,03:59 PM IST

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 8ம் தேதி  தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


கடந்த 28ம் தேதி தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது.அமைச்சரவையில் இருந்து கே.ராமச்சந்திரன், செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ் ஆகிய 3 பேர் நீக்கப்பட்டு, புதிதாக 4 அமைச்சர்கள் பதிவியேற்றுள்ளனர்.புதிய அமைச்சர்கள் ஆளுநர் மாளிகையில் கடந்த 29ம் தேதி பதவியேற்றனர். புதிய அமைச்சர்கள் நால்வருக்கும் ஆளுநர் ஆர். என். ரவி. பதவிப்பிரமாணம் மற்றும் ரகசியக் காப்பு பிரமாணம் செய்து வைத்தார். சேலம் இரா. ராஜேந்திரன், செந்தில் பாலாஜி, கோவி.செழியன் மற்றும் சா.மு.நாசர் ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். 




விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆகியுள்ளார்.  இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் பதவியேற்ற கோவி.செழியன் மற்றும் ராஜேந்திரன் ஆகிய 2 அமைச்சர்களும் முதல் முறையாக அமைச்சர்களாகியுள்ளனர். இதுதவிர, அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், மெய்யநாதன், மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ் ஆகிய 6 பேரின் துறைகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.


புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக, வருகிற 8ம் தேதி காலை 11 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்க வேண்டும் என்று கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நவம்பர் மாதத்தில் தமிழக சட்டபேரவை கூட்டமும் நடைபெறும் என்பதால் அதுகுறித்தும் விவதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவை மாற்றத்திற்கு பின்னர் முதன் முதலில் நடக்கும் அமைச்சரவை கூட்டம் இதுவாகும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்