டெல்லி: தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஏனெனில் அதிமுக-பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பாரா அல்லது எதிர்பாரா என்ற கடும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
2026 ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்ட சபை தேர்தலை எதிர்கொள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றன. அதாவது கூட்டணி தொடர்பாக பல்வேறு ஆலோசனை திட்டங்களை நடத்தி வருகின்றன. ஏனெனில் ஆளும் திமுக அரசு கூட்டணியில் வலுப்பெற்று உள்ளது. ஆனால் எதிர்க்கட்சியான அதிமுகவோ கூட்டணியில் நிலைத்தன்மை இல்லாமல் செயல்பட்டு வருகிறது. இதனால் தனது கட்சியை வலுப்படுத்த பல்வேறு யுத்திகளை கையாண்டு வருகிறது.
இதற்காகத்தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று திடீரென டெல்லி பயணமாக சென்றிருந்தார் என அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக நீடித்து வருகிறது. அவருடன் அதிமுக மூத்த தலைவர்களும் உடன் சென்றிருந்தனர்.
அப்போது டெல்லியில் உள்ள அதிமுக கட்டிடத்தை ஆய்வு செய்யவே சென்றேன். நான் யாரையும் சந்திக்கச் செல்லவில்லை என கூறியிருந்தார். ஆனால் திடீரென இரவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்திருந்தார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
இதனைத் தொடர்ந்து சென்னைக்கு திரும்பிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம், தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையை மட்டுமே பின்பற்றுவோம். மும்மொழிக் கொள்கையை திணிக்க கூடாது. தொகுதி மறு சீரமைப்பால் தமிழ்நாடு பாதிப்படைய கூடாது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொண்டேன்.
மக்கள் பிரச்சினையை பற்றி பேசவே முழுக்க முழுக்க அமித்ஷாவை சந்தித்தேன். கூட்டணி குறித்து பேசவில்லை. கூட்டணி என்பது சந்தர்ப்ப சூழ்நிலை குறித்து மாறும். தேர்தல் நடைபெற இன்னும் நாட்கள் உள்ளது. அதனால் கூட்டணி இருக்கு இல்லை என்பதை இப்போது கூற முடியாது என பதில் அளித்திருந்தார்.
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க இன்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்றுள்ளார். முன்னதாக இன்று காலை 6.30 மணிக்கு ஏர் இந்தியா விமான மூலம் டெல்லிக்கு புறப்பட்டார்.
நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த நிலையில், இன்று அண்ணாமலையின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அதிமுக- பாஜக கூட்டணிக்கு ஆதரவளிப்பாரா அல்லது எதிர்பாரா என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஏற்கனவே அதிமுக-பாஜக கூட்டணி குறித்து கடுமையாக விமர்சனங்களை முன் வைத்தவர். அதே சமயத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் நான் பதவியில் இருந்து விலகுவேன் எனவும் அறிவித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
வக்பு வாரிய சட்ட மசோதா நாளை தாக்கல்.. எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி எம்.பிக்கள் முடிவு
தமிழ்நாட்டில் வெப்பநிலை படிப்படியாக ..2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்..!
வழக்கத்தைவிட.. ஏப்ரல், ஜூனில் வெப்பம் அதிகரிக்கும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!
Emburan Movie: பெரியாறு அணை குறித்து அவதூறு கருத்துகளை நீக்குக.. பண்ருட்டி வேல்முருகன்..!
Madurai Chithirai Thiruvizha 2025: மீனாட்சி அம்மன் கோவிலில்..ஏப்ரல் 29ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்..
அருவறுப்பான ஆண்களே அழிஞ்சு நாசமா போங்க.. பாடகி சின்மயி ஆவேசம்!
கும்பகோணம் வெற்றிலைக்கும் தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு!
டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு.. ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்.. வெளியானது அரசு உத்தரவு..!
தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்.. அமித்ஷா கூறியது நகைச்சுவை:விசிக தலைவர் திருமாவளவன்!
{{comments.comment}}