கூடியது தமிழ்நாடு சட்டசபை.. நடப்பாண்டின் இறுதிக் கூட்டம்.. மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி

Dec 09, 2024,11:01 AM IST

சென்னை: நடபாண்டின் இறுதி சட்டசபைக் கூட்டத் தொடர் இன்று காலை 9.30 மணி அளவில் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்துடன் தொடங்கியது.


2024-25 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதில் 19ஆம் தேதி பொது பட்ஜெட்டும், இருபதாம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டு அடுத்த இரண்டு நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. பின்னர் 29ஆம் தேதி கூட்டத்தொடர் நிறைவடைந்தது. விதிகளின்படி அடுத்த ஆறு மாதத்திற்குள் சட்டமன்றம் கூட வேண்டும் என்ற அடிப்படையில்  தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. 




சட்டசபை இன்று காலை கூடியதும், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பின்னர் கேள்வி நேரம் தொடங்கியது.  காலை 10 மணிக்கு சட்டசபை தொடங்கியதும், மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, தொழிலதிபர் ரத்தன் டாடா, முரசொலி நாளிதழின் நிர்வாக  ஆசிரியர் முரசொலி செல்வம், தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் பி.சங்கர், சி.ஐ. திருச்சபையின் பேராயர் எஸ்றா சற்குணம் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 


இதனைத் தொடர்ந்து 2023- 24 ஆம் ஆண்டுக்கான துணை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். பின்னர் முதல்வர் மு க ஸ்டாலின் தனித் தீர்மானத்தை தாக்கல் செய்ய உள்ளார். 


மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுங்க உரிமையை உடனடியாக ரத்து செய்திட மத்திய அரசை வலியுறுத்தி இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பொங்கல் பண்டிகை 2025 : தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல் வைக்க நல்ல நேரம்.. நோட் பண்ணிக்குங்க!

news

மகிழ்ச்சி பொங்கட்டும்.. நல்லிணக்கம் வளரட்டும்.. ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

news

பொங்கல் வைக்கும் நேரத்தில் நாளை மழை பெய்யுமா.. என்ன சொல்கிறது வானிலை மையம்?

news

மாடு பிடிமாடு.. அதிகமாக பிடிச்சது யாரு.. இந்தா பிடி காரு.. களைகட்டப் போகும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

news

ரவி மோகன் என்றே இனி என்னை அழையுங்கள்.. தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கினார் நடிகர் (ஜெயம்) ரவி!

news

பொங்கல் 2025 .. பொங்கல் கிழக்கு திசையில் பொங்கி வழிந்தால்.. என்ன பலன் கிடைக்கும் ?

news

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... டோக்கன் பதிவிறக்கம் தொடங்கியது.. காளைகள் ரெடி.. ஆரம்பிக்கலாங்களா!

news

ஏழுமலையானே இது என்ன சோதனை.. திருப்பதி லட்டு கவுண்ட்டரில் தீ விபத்து.. அடுத்தடுத்து துயரம்!

news

நாங்கள் போட்டியிடும் அளவுக்குக் கூட.. தகுதியில்லாத கட்சி திமுக.. டாக்டர் தமிழிசை தடாலடி பேச்சு!

அதிகம் பார்க்கும் செய்திகள்