திருந்தாத திராவிட மாடல் ஆட்சி...அமைச்சர் அன்பில் மகேஷிற்கு டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் பதிலடி

Dec 23, 2024,07:05 PM IST

சென்னை:தமிழக கல்வி அமைச்சரே தாங்கள் மத்திய ஆட்சியில் இருக்கும் போது மறந்து விடுவதும், எதிர்க்கட்சி ஆட்சியில் இருக்கும் போது கோரிக்கை வைப்பதும் திருந்தாத திராவிட மாடல் என டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கடுமையாக சாடியுள்ளார்.


திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை தராமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது. மும்மொழிக் கொள்கையை ஒப்புக்கொண்டதால் தான் நிதியை விடுவிப்போம் என மத்திய அரசு நெருக்கடி கொடுக்கிறது. கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.




இந்த நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து  பாஜக பொதுசெயலாளர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்  சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.


இது குறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு கூறியதாவது , தமிழக மக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் திமுக தான் தமிழக மக்களை வஞ்சிக்கிறது... ஒரே ஒரு கேள்வியைத்தான் நாம் கேட்கிறோம் தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் மும் மொழிக் கொள்கை பின்பற்றப்படுகிறது.. புதிய கல்விக் கொள்கை கூட ஏதாவது ஒரு மொழி என்று தான் சொல்கிறது. ஆனால் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் மூன்றாவது மொழியாக ஹிந்தி சொல்லிக் கொடுக்கிறார்கள் என்பதை மறுக்க முடியுமா.?. எங்கள் பிள்ளைகளை பார்த்துக் கொள்கிறோம் என்கிறீர்கள்.. தமிழகப் பிள்ளைகளின் தனியார் பள்ளிகளில் மும் மொழிக் கொள்கை அரசு பள்ளி பிள்ளைகளுக்கு இருமொழிக் கொள்கை என்ற பாகுபாடு சரியா? ஏழைக் குழந்தைகளை இப்படி வஞ்சிக்கலாமா?


மும்மொழிக் கல்வியை ஒப்புக்கொண்டால் என்ன? தெலுங்கானாவில் அனைத்து பள்ளிகளிலும் இந்தி படிக்கிறார்கள். மூன்றாவது மொழியை கற்றுத்தராமல்  தமிழ்நாடு அரசுதான் மாணவர்களை வஞ்சிக்கிறது. தமிழக அரசின் கல்வி அமைச்சர் அவர்களே...மத்திய ஆட்சியில் நீங்கள்  பங்கெடுத்துக் கொண்டிருந்தபோது   இதை ஏன் செய்யவில்லை... வளமாக ஆறு மத்திய அமைச்சர்கள்  திமுகவில் வலம் வரும்போது  கல்வி துறையைப் பெற்று இந்த மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாமே... தாங்கள் மத்திய ஆட்சியில் இருக்கும் போது மறந்து விடுவதும், எதிர்க்கட்சி ஆட்சியில் இருக்கும் போது கோரிக்கை வைப்பதும் திருந்தாத திராவிட மாடல்..  என கூறியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

news

'இட்லி கடை' பிரியர்களே.. ஹேப்பி நியூஸ் .. அக்டோபர் 1ம் தேதி திரைக்கு வருகிறார் தனுஷ்!

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்