அண்ணன் துரைமுருகன் பாவம்.. மரியாதை தர வேண்டும்.. மூத்த தலைவர்களுக்கு பரிந்து பேசிய தமிழிசை!

Aug 26, 2024,05:40 PM IST

சென்னை: அண்ணன் துரை முருகன் பாவம் என்று முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். அதேபோல தலைவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என்று எடப்பாடியை விமர்சித்த அண்ணாமலைக்கும் பதில் தெரிவித்துள்ளார் தமிழிசை செளந்தரராஜன்.


சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் அமைச்சர் எ.வ.வேலு எழுதிய கலைஞர் எனும் தாய் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், ஒரு வகுப்பில் புதிய மாணவர்கள் வந்தால் சமாளித்து விடலாம்.பழைய மாணவர்கள் இருந்தால் சமாளிப்பது கஷ்டம். பாஸ் ஆகி ரேங்க் வாங்கிக்கொண்டும் போக மாட்டேன் என்று கூறிக்கொண்டு வகுப்பில் இருக்கிறார்கள் ஓல்டு ஸ்டூடன்ட்ஸ் அவர்களை சமாளிப்பது கடினம், குறிப்பாக துரைமுருகன் இருக்கிறார். 


அவர் கலைஞர் கருணாநிதி கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவர். ஒரு விஷயம் செய்து கொண்டிருக்கிறோம் என்று அவரிடம் கூறி எப்படி இருக்கிறது என்று கேட்டால் சந்தோஷம் என்று ஒரே வார்த்தையில் முடிந்துவிடுவார். நன்றாக இருக்கிறது என்று சொல்கிறாரா அல்லது நன்றாக இல்லை என்று சொல்கிறாரா என்பது யாருக்கும் புரியாது. இந்த சூழலில் சிறப்பாக வேலை பார்த்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஹேட்ஸ் ஆஃப் எனப் பேசியிருந்தார் ரஜினி. 




இதுதொடர்பாக துரைமுருகன் காட்டமான பதிலைக் கொடுக்கவே திமுக வட்டாரம் அதிர்ச்சி அடைந்தது. பின்னர் இவரும், ரஜினிகாந்த்தும் நாங்கள் நண்பர்கள் என்று மாறி மாறி சொல்லி சமரசமாகி விட்டனர். இந்நிலையில், தமிழிசை சௌந்தர்ராஜன் இதுகுறித்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,  திமுக எனும் ஆலமரத்தை சாய்க்க முடியாது என்று ரஜினி தெரிவித்திருக்கிறார். தெலுங்கானாவில், ஆந்திராவில் இருந்த பெரும் ஆல மரங்கள் சாய்ந்திருக்கின்றன. அரசியலில் அசைக்க முடியாத ஆலமரம் என்பதெல்லாம் இல்லை.


ரஜினி திமுகவில் ஒரு புயலை உருவாக்கி இருக்கிறார். சுனாமியே உருவாக்கி இருக்கிறார் என்று சொல்லலாம். பாவம் அண்ணன் துரைமுருகன். கட்சிக்காக கடுமையாக உழைத்த துரைமுருகனை ஸ்டாலினுக்கு கீழ்ப்படிந்து இருக்கச் சொல்வார்கள், அடுத்து உதயநிதிக்கு கீழ்ப்படிய சொல்வார்கள். 


அதனால் தான் பாஜக வாரிசு அரசியலை எதிர்க்கிறது. திமுகவில் ஒரு குடும்ப ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இது தவறு. எனவே திமுக தொண்டர்கள் இதை சிந்திக்க வேண்டும். பாஜகவில் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது என்பதை இப்போது மீண்டும் நினைவுபடுத்துகிறேன். பாஜகவில் மூத்தவர்களுக்கு மரியாதை கிடைக்கும் என சூசகமாக துரை முருகனுக்கு தமிழிசை அழைப்பு விடுத்துள்ளார்.


அதேபோல எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை அண்ணாமலை விமர்சித்ததற்கு பதில் அளித்த தமிழிசை செளந்தரராஜன், பொது மேடையில் பேசுவதில் அவரவர்களுக்கென ஒரு பாணி இருக்கும். அண்ணாமலை பேசியது அவரது பாணி. ஆனால் என்னைப் பொறுத்தவரை தலைவர்களுக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அதை கொடுக்க வேண்டும். வார்த்தைகள் கடுமையாக இருக்க வேண்டாம் என்பது எனது கோரிக்கை என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்