ஒலித்தது விஜய்யின் முதல் "அரசியல் குரல்".. தமிழக வெற்றிக் கழகத்தின் "ஆப்" வெளியானது!

Mar 08, 2024,05:46 PM IST

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையாக உறுப்பினர் சேர்க்கை செயலியை கட்சித் தலைவர் நடிகர் விஜய் இன்று மாலை வெளியிட்டார். மேலும் இதுதொடர்பான வீடியோவிலும் அவர் பேசியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் உருவானதைத் தொடர்ந்து ஒலித்துள்ள விஜய்யின் முதல் அரசியல் குரல் இதுதான்.


நடிகர் விஜய் பிப்ரவரி 2ம் தேதி தமிழக  வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்து அறிக்கையையும் வெளியிட்டார். 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தல் தான் எனது இலக்கு. அதுவரைக்கும் கமிட்டான படங்களை நடித்து கொடுத்து விட்டு வருகிறேன் என்று கூறியிருப்பது அனைவரும் அறிந்ததே. 


இந்நிலையில், கட்சியின் பெயர் தமிழக வெற்றி கழகம் என்று இருந்தது. தற்போது அதில் இருந்த  எழுத்துப் பிழை நீக்கப்பட்டு கட்சியின் பெயர் தமிழக வெற்றிக் கழகம் என மாற்றப்பட்டுள்ளது. அதற்கு அடுத்ததாக உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடந்தது. இவ்வாறாக கட்சி தொடர்பான ஒவ்வொரு வேலைகளிலும், கட்சி தலைவர் விஜய் மற்றும்  பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செயல்பட்டு வருகின்றனர்.




தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர்கள் சேர்க்கைக்கான அணியை நியமித்து நேற்று கட்சி சார்பில் விஜய் அறிவிப்பு வெளியிட்டார். இது தொடர்பாக விஜய் வெளியிட்ட அறிக்கையில், தமிழக வெற்றி கழகத்தின் அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருகிறோம். 2 கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளோம். இதன் முதற்கட்டமாக உறுப்பினர் சேர்க்கை அணியை உருவாக்கியுள்ளோம். மகளிர் தலைமையில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட இந்த அணியினர் கழகத் தோழர்களோடு இணைந்து மக்களுக்கு உதவி செய்வார்கள்.


தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை அணிக்கு கீழ்க்கண்டவாறு  நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள். மாநிலச் செயலாளர் சி. விஜயலட்சுமி, மாநில இணைச்செயலாளர் எஸ்.என்.யாஸ்மின், மாநில பொருளாளர் வி.சம்பத்குமார் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.





இதையடுத்து பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சி அலுவலகத்தில் இன்று மாலை நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.  அப்போது அறிமுக கூட்டம் மற்றும் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை இன்று மாலை அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து  கட்சியின் முதல் உறுப்பினராக விஜய் சேர்ந்தார்.


மேலும் இந்த செயலி தொடர்பாக ஒரு வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில் கட்சியில் இணையுமாறு விஜய் கோரிக்கை விடுத்துப் பேசியுள்ளார். 2026 சட்டசபைத் தேர்தலே நமது இலக்கு என்றும் விஜய் அதில் கூறியுள்ளார். விஜய் பேசிய முதல் அரசியல் பேச்சு இதுதான் என்பதால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் விஜய் வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.



தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களாக இணைய கீழ்க்கண்ட வழிகளைக் கடைப்பிடிக்கலாம் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.


வாட்ஸ் ஆப்-  https://bit.ly/tvkhq


டெலிகிராம்  -  https://t.me/tvkvijaybot


வெப் ஆப் - https://bit.ly/tvkfamily


வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் அனுப்ப - 'TVK'  to 09444-00-5555

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்