தீவிர உறுப்பினர் சேர்க்கை.. தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்.. முக்கிய ஆலோசனை

Feb 19, 2024,10:20 AM IST

சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்  உத்தரவின் பேரில், சென்னை பனையூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை  நிர்வாகிகளின் ஆலேசனை கூட்டம் தொடங்கியது.


நடிகராக இருந்த விஜய் கடந்த 2ம் தேதி தமிழ வெற்றிக் கழகம் என்ற கட்சியை  ஆரம்பித்து அரசியலில் நுழைந்தார். அரசியல் பிரவேசம் என்றால் சும்மாவா?.  விஜய் அடுத்த அடுத்த கட்சி வேலைகளை தொடங்கி வேகம் காட்டி வருகிறார். 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தல் தான் இலக்கு. அதற்குள் நான் நடித்து முடித்து விட்டு வந்து விடுகிறேன். கட்சியினரும் அரசியல் நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபடும் வகையில் தயாராகிக் கொள்ளுங்கள் என்று விஜய் அறிவித்திருந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.




இந்நிலையில்,  கட்சியின் பெயர் தமிழக வெற்றி கழகம் என்று இருந்தது. தற்போது அதில் இருந்த ஒற்றுப்பிழை சரி செய்யயப்பட்டு தமிழக வெற்றிக் கழகம் என மாறியுள்ளது.நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியின் பெயரில் இருந்த எழுத்துப் பிழை நீக்கப்பட்டு கட்சியின் பெயர் தமிழக வெற்றிக் கழகம் என மாற்றப்பட்டுள்ளது. தனது தவறை திருத்திக் கொண்ட விஜய்யின் இந்த செயல் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிழை திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பின்னர் முதல் அறிக்கையை கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டார்.


அதில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சி கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலைய செயலக அலுவலகத்தில் நாளை காலை 9 மணி அளவில் நடைபெற உள்ளது. நமது கழகத்தின் மாவட்ட தலைமை நிர்வாகிகள் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவித்திருந்தார்.


இதன் படி, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்  அனைவ௫ம் காலை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வந்தனர்.இதனைத் தொடர்ந்து ஆலோசனை கூட்டம் தற்பொழுது நடைபெற்று வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

தோனி அதிரடி.. கடைசி நேர போராட்டம் வீண்.. மீண்டும் ஒரு தோல்வி.. ஏமாற்றத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்

news

தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம்.. உச்சநீதிமன்றம்

news

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்.. இனி முதல்வர் ஸ்டாலினே பல்கலைக்கழக வேந்தர்.. பி.வில்சன்

news

உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது .. துணைவேந்தர்களை உடனே நியமிக்க வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்

news

Tamil Nadu leads.. பேரறிவாளவன் வழக்குக்குப் பின்.. சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய உச்சநீதிமன்றம்!

news

ஆளுநருக்கு எதிரான.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது‌.. முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!

news

Summer Food tips.. அடிக்கும் அதிரடி வெயிலுக்கு.. கருப்பு கவுனி அரிசி மோர் கூழ் சூப்பரப்பு!

news

ஏப்ரல் 10.. சம்பவம் காத்திருக்கு.. குட் பேட் அக்லி படத்திற்கு.. யுஏ சான்றிதழ்.. ரசிகர்கள் வெயிட்டிங்

news

ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்: திருமாவமவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்