சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் வரும் ஜூன் 18ம் தேதி சென்னை பனையூரில் நடைபெற உள்ளது.
நடிகர் விஜய் 2009ம் ஆண்டு நற்பணி மற்றும் ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கம் என்ற அமைப்பாக மாற்றினார். இதற்கு ஒரு ஆண்டு முன்னரே தனது ரசிகர் மன்றங்களுக்கென தனியே ஒரு கொடியினை அறிமுகப்படுத்தியிருந்தார். அதன் பின்னர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தனது இலக்கு 2026தான் என்று அவர் தெளிவாக கூறி விட்டார். தற்போது கட்சியை பலப்படுத்தும் வேலைகளில் அவரது கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.
2021 ம் ஆண்டு விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் தனது அரசியல் பயணத்தின் முதல் பயணத்தைத் தொடங்கினார் விஜய். அதன் பிறகு அவரது இயக்கம் சார்பில் கிராமப்புற உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சுயேட்சையாக போட்டியிட்டனர். போட்டியிட்ட 169 வேட்பாளர்களில் 129 பேர் வெற்றி பெற்று அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஷாக் கொடுத்தனர். 2022 ல் நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய்யின் பிரச்சாரம் இல்லாமலேயே 10க்கும் மேற்பட்ட இடங்களை விஜய் மக்கள் இயக்கத்தினர் கைப்பற்றினர்.
2024 மக்களவை தேர்தலில் போட்டியிடுவார் என்று பெரும்பாலானவர்கள் எதிர்பார்த்திருந்த வேலையில், 2026 சட்டப்பேரவை தேர்தல் தான் இலக்கு என்று விஜய் தெரிவித்து விட்டார். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் வரும் ஜூன் 18ம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கூட்டத்தில் விஜய்யின் பிறந்த நாள் கொண்டாட்டம், புதிய நிர்வாகிகள் நியமனம் மற்றும் கட்சி தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்வது குறித்தும் பேசப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாமக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் அன்புமணி நீக்கம்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு
பாமகவை பிளவுபடுத்துவாரா டாக்டர் அன்புமணி.. ராமதாஸின் திட்டம் என்ன?.. பரபரப்பில் தமிழக அரசியல்
தமிழகத்திற்கு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையால்.. பாஜக அரசியல் சூழல் எழுச்சி பெறுமா..?
மாநில உரிமை காக்கும் போராட்டத்தின் முன்னோடி திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
Flower Market Price: பங்குனி உத்திரம்... கோயம்பேட்டில் பூக்களின் விலை உயர்வு
சிங்கப்பூர் அரசு விழாவில்.. வாழ்வியல் இலக்கியப் பொழில் சிறப்பு உரையாளராக.. முனைவர் மு. ஜோதிலட்சுமி
பனையூரில் நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
அஜித் படத்திற்கு.. வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
அதிரடி காட்டி வரும் தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.2160 உயர்வு.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
{{comments.comment}}