சென்னை: வடகிழக்கு பருவமழை முடிய இன்னும் 26 நாட்கள் உள்ள நிலையில் அதற்கு முன்பாகவே தமிழ்நாட்டில் இயல்பை விட கூடுதலாக மழை பெய்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
பொதுவாகவே தமிழ்நாட்டில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்று மாதங்கள் வடகிழக்கு பருவமழை காலமாகும். இந்த காலகட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்யும். விவசாயம் செழிக்கும். இதனால் தை மாதம் பொங்கல் பண்டிகையின் போது அறுவடை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வரிசையில் இந்த ஆண்டும் அக்டோபர் மாதம் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் உருவான காற்று சுழற்சி காரணமாக மிதமான மழையாக தொடங்கிய வடகிழக்கு பருவமழை நவம்பர் இறுதியில் அதி கனமழை வரை கொட்டி தீர்த்தது.
நடப்பாண்டில் டிசம்பர் மாதம் அதிக கன மழை பெய்யக்கூடும் எனவும், இயல்பை விட 123 விழுக்காடு அதிக மழைப்பொழிவு இருக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தது.வங்கக்கடலில் கடந்த வாரம் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நாளில் இருந்து ஃபெங்கல் புயலாக வலுவடைந்து கரையை கடந்த பின்னரும் கூட மழையின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்தது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களிலும், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும், திருவண்ணாமலை, விழுப்புரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட உள் மாவட்டங்களிலும், பரவலாக அதீத கனமழை கொட்டி தீர்த்தது. அதே சமயம் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் நீர்நிலைகள், ஆறுகள், ஏரிகள், அணைகளின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகின்றன.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஒரு டேட்டாவில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் முடிய இன்னும் 26 நாட்கள் உள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் தற்போது இயல்பை விட கூடுதலாக மழை பொழிந்துள்ளது. அதாவது மூன்று மாதங்களில் சராசரியாக 44 சென்டிமீட்டர் மழை பெய்ய வேண்டிய நிலையில் இதுவரை பெய்த மழையே 45 சென்டிமீட்டரையும் தாண்டி மழை பெய்துள்ளது. குறிப்பாக அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்று மாதத்தில் பெய்ய வேண்டிய வடகிழக்கு பருவமழை டிசம்பர் 5 வரை 46 சென்டிமீட்டர் பெய்துள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் 2015 ஆம் ஆண்டு அதிகபட்சமாக 66 சென்டிமீட்டர் மழை பதிவானது. அதேபோல் மிகக் குறைந்த மழையாக 2016ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை 16 சென்டிமீட்டர் தான் பெய்திருந்தது. அதேபோல் 2017ல் 39 சென்டிமீட்டரும், 2018ல் 33 சென்டிமீட்டர், 2019 ல் 45 சென்டி மீட்டர், 2020ல் 47 சென்டிமீட்டரும் மழையும் பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து 2021 ஆண்டு அதி உச்சமாக 71 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. 2022 ஆம் ஆண்டு 44 சென்டிமீட்டர், 2023 ஆம் ஆண்டு 45 சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது.
சென்னை மழை:
சென்னையைப் பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை 2015 ஆம் ஆண்டு 161 சென்டிமீட்டர், 2016ல் 34 சென்டிமீட்டர், 2017ல் 93 சென்டிமீட்டர், 2018ல் 35 சென்டிமீட்டர், 2019 ல் 63 சென்டிமீட்டர், 2020ல் 104 சென்டிமீட்டர், 2021ல் 136 cm, 2022ல் 92 சென்டிமீட்டர், 2023ல் 108 சென்டிமீட்டர், 2024ல் 84 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. வரும் நாட்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார் பிரதீப் ஜான்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எப்ஐஆர் நகல் வெளியானது சட்டப்படி குற்றம்.. விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.. போலீஸ் கமிஷனர் அருண்
Annamalai.. சவுக்கால் அடிப்பேன்.. திமுக ஆட்சி போகும் வரை செருப்பு போட மாட்டேன்.. அண்ணாமலை ஆவேசம்!
Anna university: அண்ணா பல்கலைக்கழக சம்பவம்.. கடுமையான தண்டனை தர வேண்டும்.. கனிமொழி
Annamalai: சவுக்கடி, செருப்பு புறக்கணிப்பு, கடும் கோபம்.. வரலாறு காணாத ஆவேசம் காட்டிய அண்ணாமலை!
Chandrapriyanga.. மகன்களுக்கு சமையல் கற்று தரும் சந்திரபிரியங்கா.. செம்ம செம.. சூப்பர் அம்மாதான்!
Nallakannu: ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு நல்லகண்ணு பெயர்... முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Rajinikanth -Sivakarthikeyan meet D Gukesh.. அடுத்தடுத்து சர்ப்பிரஸை அனுபவித்த டி. குகேஷ்!
Tsunami: சுனாமி ஆழிப்பேரலை தாண்டவமாடி 20 வருஷமாச்சு.. மீனவர்கள் குடும்பம் குடும்பமாக அஞ்சலி!
வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு.. ஒரு வாரத்திற்கு மிதமான மழைக்கே வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்!
{{comments.comment}}