சென்னை மெட்ரோவுக்கு.. 28 புதிய ரயில்களை கொள்முதல் செய்ய .. ஓகே சொன்ன மத்திய அரசு!

Aug 10, 2024,05:13 PM IST

சென்னை: முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்காக  தலா 6 பெட்டிகள் கொண்ட 28 புதிய மெட்ரோ ரயில்களை கொள்முதல் செய்ய மத்திய நிதி மற்றும் பொருளாதார விவாகாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.


தமிழ்நாடு அரசு மெட்ரோ ரயில் தொடர்பான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் சென்னையில் முதற்கட்டமாக விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை, பரங்கிமலை முதல் சென்ட்ரல் ரயில் நிலையம் வரை என மொத்தம் 54 கிலோ மீட்டர் தொலைவுக்கு தலா 4 பெட்டிகள் கொண்ட 45 மெட்ரோ ரயில்களை இயக்கி வருகின்றது. இதில் தினமும் மூன்று லட்சம் முதல் 3.5 லட்சம் பேர் வரை பயணம் செய்கின்றனர். 




நாளுக்கு நாள் மெட்ரோ ரயிலில் பயணிக்கும், பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி இரு மார்க்கத்திலும் 4 முதல் 5 வரை ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், ஆறு பெட்டிகள் கொண்ட ரயில் பெட்டிகளை கொள்முதல் செய்யவும் முடிவு செய்யப்பட்டது. 


இத்திட்டம் தொடர்பான விரிவான அறிக்கையை மெட்ரோ நிர்வாகம் தமிழக அரசுக்கு அனுப்பியது. இதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்தது. இந்த ஒப்புதல் ஆவணத்தினை 2023 ஆகஸ்ட்டில் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. கூடுதலாக தேவைப்படும் ரயில் பெட்டிகளை கணக்கிட்டு ரூபாய் 2,820 கோடி மதிப்பில்  6 பெட்டிகள் கொண்ட 28 மெட்ரோ ரயில்களை கொள்முதல் செய்ய ஜூன் மாதம் நிதி ஆயோக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.


இரு மார்க்கத்திலும் 6 பெட்டிகள் கொண்ட 28 புதிய மெட்ரோ ரயில்களை தயார் செய்ய மத்திய நிதி மற்றும் பொருளாதார விவகாரத்தை ஒப்புதல் அளித்துள்ளதாக மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. வெளிநாட்டு வங்கிக் கடன் உதவியுடன் இந்த ரயில் பெட்டிகள் வாங்கப்படவுள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்