சென்னை: தமிழ்நாட்டில் திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரை வெயில் வெளுத்தெடுத்து வரும் நிலையில் வருகிற 25ம் தேதி முதல் 5 நாட்களுக்கு பரவலாக லேசானது முதல் மிதமான மழைக்கு வாயப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் மகிழ்ச்சிச் செய்தியைச் சொல்லியுள்ளது.
தமிழ்நாட்டில் படிப்படியாக வெயில் அதிகரித்து வருகிறது. எல்லாப் பகுதிகளிலும் நல்ல வெயில் அடித்துக் கொண்டுள்ளது. மேலும் இயல்பை விட கூடுதலாக 2 முதல் 3 டிகிரி அளவுக்கு வெயில் அதிகரித்தும் காணப்படுகிறது. மாசி மாதத்திலேயே வெயில் கொளுத்த ஆரம்பித்திருப்பதால் பங்குனியை நினைத்து இப்போதே மக்கள் பதட்டமாக ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஒரு செய்தியைத் தெரிவித்துள்ளது. அதன்படி 25ம் தேதி முதல் மார்ச் 1ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது பொதுவாக வறண்ட வானிலையே நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் திருப்பத்தூரில் அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் வெளுத்துள்ளது.
அடுத்த 2 நாட்களில் வெப்ப நிலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது. அதேசமயம் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை வெப்ப நிலையில் சற்று தளர்வு காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
India Vs Pakistan.. டென்ஷனே இல்லாமல் சேசிங்கை தொடரும் இந்தியா.. விராட் கோலி அசத்தல் சாதனை!
வெயிலைப் பார்த்து கண்ணு பூத்துப் போச்சா.. 25ம் தேதி முதல் மழை பெய்யப் போகுதாம்.. Ready to wet!
நாங்கள் ஜெயித்துக் கொண்டே இருப்போம்.. டிரம்ப், பிரதமர் மோடிக்கு ஆதரவாக.. ஜார்ஜியா மெலோனி பேச்சு
ஓநாயும் வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா?.. ஓபிஎஸ்ஸுக்கு கதவை மூடினார் எடப்பாடி பழனிச்சாமி!
பாகிஸ்தான் ஜெயிக்கட்டும்.. அப்பதான் கரெக்டா இருக்கும்.. என்ன அதுல் வாசன் இப்படிச் சொல்லிட்டாரு
மெரீனா பீச், பெசன்ட் நகர் பீச்சுக்குப் போனா இந்தியா பாகிஸ்தான் போட்டியை நேரில் கண்டு களிக்கலாம்!
போப்பாண்டவர் பிரான்சிஸ் உடல் நிலை எப்படி இருக்கிறது?.. கவலையில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்
சீனாவில் மீண்டும் ஒரு கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு.. வவ்வாலிலிருந்து மனிதர்களுக்கு பரவுமாம்!
2000 கோடி அல்ல.. 10000 கோடியே கொடுத்தாலும் சரி.. கையெழுத்துப் போட மாட்டோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
{{comments.comment}}