என்னா பேச்சு பேசினார் திருப்பூர் சுப்பிரமணியம்.. தியேட்டர்கள் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விலகல்!

Nov 16, 2023,04:08 PM IST

திருப்பூர்: அதிகாலை காட்சியெல்லாம் தேவையில்லாதது.. நாங்க போட மாட்டோம் என்றெல்லாம் லியோ பட வெளியீட்டுக்கு முன்பு சவடாலாக பேசி வந்த திருப்பூர் சுப்பிரமணியம், இப்போது தனது தியேட்டரிலேயே சட்ட விரோதமாக அதிகாலை காட்சியை ஒளிபரப்பி சிக்கலில் மாட்டியுள்ளார். 


கலெக்டரிடமிருந்து நோட்டீஸ் பெற்றுள்ள அவர் தற்போது தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்திற்குள் எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக தலைவர் பதவியையே ராஜினாமா செய்து விட்டார். 


தமிழ்ப் படத்துக்குத்தான் அதிகாலை காட்சி கிடையாது, இந்திப் படங்களுக்கு உண்டு என்று தெரியாமல் நினைத்து காட்சியை போட்டு விட்டதாக அவர் சப்பைக்கட்டு விளக்கமும் அளித்துள்ளார்.




சுப்பிரமணியனுக்கு திருப்பூரில் சக்தி சினிமாஸ் என்கிற திரையரங்கு உள்ளது. இந்த திரையரங்கில், தீபாவளியை முன்னிட்டு அரசாணையை மீறி டைகர் 3 படத்தை காலை 7 மணிக்கு  திரையிட்டதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.  காலை 7 மணிக்கு திரையிட்டதற்கான  ஆன்லைன் புக்கிங் செய்யப்பட்டதற்கான ஆதாரங்களும் வெளியாகின. சுப்பிரமணியன் மீது ஏற்பட்ட  புகாரின் அடிப்படையில் தாசில்தார் நேரடியாக சென்று விசாரித்து அதுதொடர்பான தகவல்களை  திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைத்தார்.


இந்த அறிக்கையில், அரசு அனுமதித்த நேரத்திற்கு முன்பாக சிறப்பு காட்சிகள் வெளியிட்டதற்கான ஆதரங்கள் இருந்தன. இதற்கான விளக்கம் கேட்டு தியேட்டர் உரிமையாளர் சக்தி சுப்ரமணியத்திற்கு மாவட்ட நிர்வாகம் தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பட்டது. இந்த  சம்பவத்தால் அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும், அவர் விளக்கும் கொடுப்பதை வைத்தே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சுப்பிரமணியன் அதிரடியாக தன்னுடைய தலைவர் பதவியை தானாக முன் வந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.


இந்த நிலையில் சக்தி சுப்பிரமணியம் இன்று நிருபர்களை சந்தித்து கூறுகையில்,  "எனது சொந்த வேலை காரணமாக, நமது சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன். இதுவரை ஒத்துழைப்பு கொடுத்த, அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி என தெரிவித்துள்ளார்.


லியோ படத்தின்போது இவர் விஜய் ரசிகர்களின் கடும் கோபத்தையும், எதிர்ப்பையும் சம்பாதித்திருந்தார். இப்போது அவர் பேசிய பேச்சு அவருக்கே எதிராக திரும்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக .. எம்.ஏ. பேபி தேர்வு!

news

தமிழ்நாட்டு மண்ணில் பிரதமர் மோடி உறுதி தர வேண்டும்.. ஊட்டியிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

news

நவீன பாம்பன் கடல் பாலம்.. நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.. புதிய ரயிலுக்கும் பச்சைக் கொடி!

news

அமைச்சர் நிர்மலா சீதாராமனை நான் சந்திச்சேனா.. நாம் தமிழர் தலைவர் சீமான் திட்டவட்ட மறுப்பு!

news

Tamil Nadu rains.. இன்னும் 10 நாட்களுக்கு மழைதான்.. தமிழ்நாடு வெதர்மேன் ஹேப்பி நியூஸ்!

news

அதிபர் டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் வெடித்தது பெரும் போராட்டம்.. வீதிகளில் இறங்கிய மக்கள்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 06, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

Chennai Super Kings no more a champion team?.. தொடர் சொதப்பல் + தோல்விகளால்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

news

மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. ரசிகர்கள் கடும் அதிருப்தி!

அதிகம் பார்க்கும் செய்திகள்