நியாயமான விசாரணை தொடங்கும் முன்பே  கொல்லப்படுகிறது.. ஆளுநர் மாளிகை ஆதங்கம்

Oct 26, 2023,05:33 PM IST

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை கேட் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக ஆளுநர் மாளிகை புதிய டிவீட் ஒன்றை வெளியிட்டுள்ளது.


சென்னை கிண்டியில் ராஜ்பவன் உள்ளது. ஆளுநர் மாளிகையான இங்கு நேற்று கருக்கா வினோத் என்ற ரவுடி பெட்ரோல் குண்டை வீசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டார். அவர் வீசிய குண்டு ராஜ்பவன் கேட் மீது விழுந்து வெடித்தது. மற்ற வெடிக்காத  3 குண்டுகளை அங்கிருந்த போலீஸார் மடக்கிப் பிடித்து பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.


கருக்கா வினோத் ஏற்கனவே சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்திக் கைதாகி சிறைக்குப் போனவர். சமீபத்தில்தான் விடுதலையாகி வெளியே வந்தார். வந்தவர், ராஜ்பவன் மீது தாக்குதல் நடத்த முயன்று சிக்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஆளுநர் மாளிகை சார்பில் போலீஸில் புகார் தரப்பட்டது. இந்தப் பின்னணியில் தற்போது ஆளுநர் மாளிகை புதிய டிவீட் ஒன்றை போட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:




ராஜ்பவனின் தாக்குதல் குறித்த புகாரை காவல்துறை பதிவு செய்யவில்லை. தன்னிலையாக பதிவு செய்யப்பட்ட புகார், தாக்குதலை சாதாரண நாசகார செயலாக நீர்த்துப் போகச் செய்து விட்டது. அவசர கதியில் கைது மேற்கொள்ளப்பட்டு  மாஜிஸ்திரேட்டை நள்ளிரவில் எழுப்பி குற்றம் சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டு விட்டதால், பின்னணியில் உள்ளவர்களை அம்பலப்படுத்தக் கூடிய விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது. நியாயமான விசாரணை தொடங்கும் முன்பே கொல்லப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.


இதற்கிடையே, பெட்ரோல் குண்டு விவகாரம் தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், ஆளுநர் ஆர். என். ரவியை நேரில் சந்தித்து விளக்கம் அளித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

சிங்கம்-கழுகு கூட்டணியா?.. சிலாகிக்கும் நா.த.க.. சீமான் சொன்ன பதில்.. ரஜினியுடன் சந்திப்பு ஏன்?

news

ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!

news

Drumsticks price.. என்னடா இது.. முருங்கைக்கு வந்த கிராக்கி.. விர் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை!

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்