ஏப்ரல் 19ம் தேதி ஓட்டுப் போட்டு விட்டு.. முடிவை அறிய.. 45 நாட்கள் காத்திருக்க வேண்டும்!

Mar 16, 2024,08:49 PM IST

டெல்லி: தென் மாநிலங்களில் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு மாநிலம் என பிரித்து தேர்தல் நடத்துகிறது தேர்தல் ஆணையம்.


லோக்சபா தேர்தல் தேதியை இன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதில் 7 கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.


முதல் கட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.மொத்தம் வரும் 7 கட்டங்களில் தென் மாநிலங்களைப் பொறுத்தவரை 4 கட்டங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது.


கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கு 2வது கட்டத்தின்போது தேர்தல் நடைபெறும்.  அதே கட்டத்தில் கர்நாடகத்தின் 14  தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும்.




கர்நாடகத்தின் மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு மூன்றாவது கட்டமான மே 7ம் தேதி தேர்தல் நடைபெறும்.  ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள 25 தொகுதிகளுக்கும் 4வது கட்டத்தின்போது வாக்குப் பதிவு நடைபெறும். தெலங்கானாவில் உள்ள 17 தொகுதிகளுக்கும் 4வது கட்டத்தில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தேர்தல் முதல் கட்டத்திலேயே முடிந்து விட்டாலும் கூட முடிவை அறிய ஜூன் 4ம் தேதி வரை  காத்திருக்க வேண்டும். அதாவது கிட்டத்தட்ட 45 நாட்கள் காத்திருக்க வேண்டும். கிட்டத்தட்ட மொத்த  இந்தியாவும் ஓட்டுப் போட்டு முடிக்கும் வரை தென் மாநில மக்கள் அமைதி காத்திருக்க வேண்டியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

news

'இட்லி கடை' பிரியர்களே.. ஹேப்பி நியூஸ் .. அக்டோபர் 1ம் தேதி திரைக்கு வருகிறார் தனுஷ்!

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்