எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

Apr 04, 2025,06:48 PM IST

சென்னை: தமிழ்நாடு காவல்துறையில்  எஸ்.ஐ பதவியில் 1299 காலிப் பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது சீருடை பணியாளர் தேர்வு வாரியம். இதற்கு இணையம் வழியாக விண்ணப்பம் ஏப்ரல் 7 தேதி தொடங்கி மே 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது.


தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம்  14-ந்தேதி தொடங்கியது. இந்தக் கூட்டம் தொடங்கிய அன்றே நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.அதற்கு மறுநாளான 15-ந்தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. 


இதில் பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதில் பெண்கள் பெயரில் 10 லட்சம் வரை அசையா சொத்துக்கள் பதிவு செய்தால் பதிவு கட்டணம் ஒரு சதவிகிதம் குறைக்கப்படும், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய திட்டம், உயர் கல்வி திட்டங்கள், 40,000 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் போன்றவை பல்வேறு திட்டங்கள் இடம்பெற்று இருந்தன. குறிப்பாக இந்த ஆண்டு தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 40,000 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிப்பு இளைஞர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. 


அதன்படி தமிழக அரசு அங்கன்வாடி பணியாளர்கள், அரசு பள்ளிகளில் சத்துணவு உதவியாளர் பணி, தமிழகப் போக்குவரத்துக் கழகங்களில் காலிப்பணியிடங்கள் என ஒவ்வொரு துறையிலுள்ள காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது தமிழ்நாடு காவல்துறையில் எஸ்.ஐ காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது சீருடை பணியாளர் தேர்வு வாரியம். 




 காவல் சார்பு ஆய்வாளர் பணியிடங்களில் சீருடை சேவைக்கான பணியாளர்களை தேர்வு செய்ய சீருடை பணியாளர் தேர்வு வாரியம் செயல்பட்டு வருகிறது. இதில் தாலுக்காவில் 933 (ஆண்-654, பெண்- 279) மற்றும் ஆயுதப்படையில் 366 ( ஆண்-255, பெண்- 111 என மொத்தம் 1299 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


இந்த நிலையில் காவல் சார்பு ஆய்வாளர் பணியிடங்களில் மொத்தம் 1299 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட உள்ளன.   


இதற்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி, மே 3 தேதியுடன் நிறைவடைகிறது.


மொத்தம் 1299 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அரசு பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும். 20 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். வகுப்பு பிரிவில் வயது வரம்பிற்கு தளர்வு உண்டு.

இந்தப் பணியிடங்களுக்கு ஊதியம் ரூபாய் ரூ.36, 900 முதல் ரூ 1,16,600 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்