அடுத்தடுத்து வலுக்கும் ஆளுநர் - தமிழ்நாடு அரசு மோதல்.. மக்கள் கடும் அதிருப்தி!

Jan 10, 2023,10:39 AM IST
தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையிலான மோதல் மேலும் வலுக்கத் தொடங்கியிருப்பது தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் கவலை அலைகளை எழுப்பியுள்ளது. மாநிலத்தில் எத்தனையோ பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் தாங்கள் அவதியுற்று வரும் நிலையில் இப்படி அரசும், ஆளுநரும் மோதல் போக்கில் ஈடுபடுவது சரியா என்ற கருத்தை மக்கள் முன்வைக்கின்றனர்.



ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் அரசியல் சூழலே மாறிப் போய் விட்டது. அதிமுக பிளவுபட்டது.  அதன் பாதிப்பை தனக்கு சாதகமாக்கி பாஜக வளரத் தொடங்கியது. இன்று ஆளும் திமுகவுடன், நேருக்கு நேர் பாஜகதான் மல்லுக்கட்டி வருகிறது. அதிமுக பெரிய அளவில் திமுகவுக்கு சவால் விடுக்க முடியாத நிலைக்குப் போய் விட்டது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தமிழ்நாடு ஆளுநர் பதவியும் திடீர் பலம் மிக்கதாக மாறியுள்ளது. முதலில் ராம் மோகன் ராவ் ஆதிக்கம் செலுத்தினார். பின்னர் பன்வாரிலால் புரோஹித் வந்தார். அவரது செயல்பாடுகளும் சர்ச்சைக்குள்ளாகின. அவரைத் தொடர்ந்து வந்து சேர்ந்தார் ஆர். என். ரவி. இவர் வந்தது முதலே சர்ச்சைதான். அடுத்தடுத்து அரசுக்கும், இவருக்கும் இடையிலான மோதல் வலுத்துக் கொண்டே வந்தது.

ஆளுநர் ஆர். என். ரவி தொடர்ந்து பேசி வந்த பல கருத்துக்களுக்கு ஆளும் கட்சி முதல் பாஜக,அதிமுக தவிர்த்து மற்ற அனைத்துக் கட்சிகளுமே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அரசியல்வாதி போல பேசுகிறார். ஆர்எஸ்எஸ் அஜெண்டாவை வலியுறுத்துகிறார்.. தமிழ்நாட்டுக்கு விரோதமாக பேசுகிறார் என்றெல்லாம் சர்ச்சைக்குள்ளானார் ஆர்.என்.ரவி.

இந்த நிலையில் நேற்று தமிழ்நாடு சட்டசபையில், ஆளுநர் உரையை அவர் வாசித்தபோது, அரசு எழுதிக் கொடுத்ததில் சில பகுதிகளை வாசிக்க மறுத்து அதை ஸ்கிப் செய்த செயல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த இடத்திலேயே ஆளுநருக்கு அரசு எழுதிக் கொடுத்ததை மட்டுமே அவையில் பதிவு செய்ய வேண்டும். அவராக சேர்த்த பகுதிகளை சபைக் குறிப்பில் ஏற்றக் கூடாது என்று தீர்மானம் கொண்டு வந்து அதிர வைத்தார்.

இதை எதிர்பாராத ஆளுநர் ரவி உடனடியாக சபையிலிருந்து வெளிநடப்பு செய்தார். தேசிய கீதம் பாடும் வரை அவர் காத்திருக்கவில்லை. இந்த செயலும் பெரும் சர்ச்சையானது. இந்த நிலையில் ஆளுநர் மாளிகையிலிருந்து பொங்கல் விழா தொடர்பான அழைப்பிதழ் வெளியாகியுள்ளது. அதில் தமிழ்நாடு அரசின் இலச்சினை இல்லை. அதேபோல தமிழக ஆளுநர் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் ஒரு டிவீட் போட்டுள்ளார்.

அதில், ஆளுநர் அழைப்பிதழ். கடந்த முறை வந்த அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலட்சினை இருந்தது. இந்த முறை வந்துள்ள அழைப்பிதழில் மூன்று இடங்களிலும் இந்திய அரசின் இலட்சினை மட்டுமே இருக்கிறது.

நமது இலட்சினையில் தமிழ்நாடு என்று எழுதப்பட்டுள்ளதால் அதனைப் பயன்படுத்த மறுத்துள்ளார். 
இதேபோல தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்திலிருந்தும் வாடகை வீட்டிலிருந்தும் ரோசப்பட்டு வெளியேறுவார் என்று எதிர்பார்க்கலாமா? என்று கேட்டுள்ளார் வெங்கடேசன்.

ஆளுநர் - தமிழ்நாடு அரசின் இந்த மோதலானது ஒரு பைசாவுக்குக் கூட பிரயோஜனம் இல்லாதது.. மக்களுக்கு இது தேவையில்லாதது.. மக்களுக்கு ஆயிரக்கணக்கான பிரச்சினைகள் உள்ளன. அதைத் தீர்க்கத்தான் அரசும் இருக்கிறது, ஆளுநரும் இருக்கிறார், கட்சிகளும் உள்ளன. இவர்கள் அனைவரும் அதை  உணர்ந்து வெட்டிப் பிரச்சினைகளில் வீண் காலம் கழிக்காமல், மக்களுக்காக உழைக்க முன்வருவதே நல்லது என்று சாமானிய மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

சமீபத்திய செய்திகள்

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

அதிகம் பார்க்கும் செய்திகள்